அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்: திருக்கண்ணபுரம்

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

மாலைநண் ணித்தொழு தெழுமினோ வினைகெட

காலை மாலைகம லமலர் இட்டுநீர்

வேலைமோ தும்மதில் சூழ்திருக் கண்ணபுரத்து

ஆலின்மே லாலமர்ந் தானடி யிணைகளே.

(திருவாய்மொழி-9.10.1)

மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினைகெட

காலை மாலை கமல மலர் இட்டுநீர்

வேலை மோதும் மதில் சூழ் திருக்கண்ணபுரத்து

ஆலின் மேலால் அமர்ந்தான் அடி இணைகளே.

(திருவாய்மொழி-9.10.1)

அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 5

கண்ணன் கழலிணை
நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம்
திண்ணம் நாரணமே.

(திருவாய்மொழி 10-5-1)

அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்: திருக்கடித்தானம்

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 6

எல்லியும் காலையும் தன்னை நினைந்தெழ
நல்ல அருள்கள் நமக்கே தந்தருள் செய்வான்
அல்லியம் தண்ணந் துழாய்முடி அப்பனூர்
செல்வர்கள் வாழும் திருக்கடித்தானமே.

திருவாய்மொழி (8-6-1)

அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்:

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 9

சூழ்விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின

ஆழ்கடல் அலை திரை கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என்னப்பன்
வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டு உகந்தே.

(திருவாய்மொழி - 10.9.1)

அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்:

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 9

நாரணன் தமரைக் கண்டு உகந்து நல் நீர் முகில்
பூரண பொற்குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீர் அணி கடல்கள் நின்று ஆர்த்தன; நெடுவரைத்

தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே.

(திருவாய்மொழி - 10.9.2)

அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்:

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 9

தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழிவனர் பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே;
எழுமின் என்று இருமருங்கு இசைத்தனர் முனிவர்கள்
வழி இது வைகுந்தர்க்கு என்று வந்து எதிரே.

(திருவாய்மொழி - 10.9.3)

அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்:

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 9

எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்;
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே.

(திருவாய்மொழி - 10.9.4)

மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
போதுமின், எமது இடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர், கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வி உள் மடுத்தே.

(திருவாய்மொழி - 10.9.5)

வேள்வி உள்மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள், வலம்புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆள்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே.

(திருவாய்மொழி - 10.9.6)

மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர்; தொடு கடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணிமுடி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே.

(திருவாய்மொழி - 10.9.7)

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com