ஸ்ரீ மதே ராமாநுஜாய நம:
உலகம் உண்ட பெருவாயா !
அருளியவர் :நம்மாழ்வார்
உலகம் உண்ட பெருவாயா ! உலப்பில் கீர்த்தி யம்மானே !
நிலவும் சுடர்சூ ழொளிமூர்த்தி ! நெடியாய் அடியே னாருயிரே !*
திலதம் உலகுக் காய்நின்ற திருவேங் கடத்தெம் பெருமானே !*
குலதொல் லடியேன் உனபாதம் கூடு மாறு கூறாயே.
(திருவாய்மொழி - 6.10.1)
ஏனோ மனமே இனிமேலாகிலும்...
பிரிவு:ஆசார்ய வைபவம்
ஏனோ மனமே இனிமேலாகிலும்
எம்பெருமானாரை பஜியாயோ !
வானோர்க்கு அமுதீந்த தீனசரண்யனை
தானே பஜித்து தாலாட்டினாராம் ! (ஏனோ)
திருநாராயண புரத்தில் வந்து
திருநாரணரை...
ராமானுஜர் கிளிக்கண்ணி !
பிரிவு:ஆசார்ய வைபவம்
ராகம்: செஞ்சுருட்டி
ஆதிசேஷன் அம்சமடி ! ஆண்டாளின் அண்ணனடி !
ஆளவந்தார்க்கடிமையடி - கிளியே !
எங்கள் இராமானுசனடி ! கிளியே !
ஸ்வாமி யதிராஜனடி !
அரங்கனின் அடிமையடி ! வேங்கடத்து வேதியனடி !
பெரும்புதூர் வள்ளலடி - கிளியே !
எங்கள் இராமானுசனடி !...
ஈயாடுவதோ கருடர்க்கெதிரே...
பிரிவு:ஆழ்வார்கள்
ஏப்ரல் 25 2013, சித்திரையில் சித்திரை - மதுரகவி ஆழ்வாரின் திருநக்ஷத்திரம். திருவாய்மொழியின் பெருமையை நீங்களும் பாடலாமே... ஈயாடுவதோ கருடர்க்கெதிரே ! இரவிக்கெதிர் மின்மினி ஆடுவதோ ! நாயாடுவதோ நரகேசரி முன் ? அழகூர்வசி...
கண்ணபுரத்தென் கருமணியே !
அருளியவர் :குலசேகர ஆழ்வார்
உலகம் உண்ட பெருவாயா !
அருளியவர் : நம்மாழ்வார்
பாசுர எண் : 2733
திவ்ய தேசம் : திருவேங்கடம் (திருப்பதி)
திருவாய்மொழி : 6-10-1

உலகம் உண்ட பெருவாயா ! உலப்பில் கீர்த்தி யம்மானே !
நிலவும் சுடர்சூ ழொளிமூர்த்தி ! நெடியாய் அடியே னாருயிரே !*
திலதம் உலகுக் காய்நின்ற திருவேங் கடத்தெம் பெருமானே !*
குலதொல் லடியேன் உனபாதம் கூடு மாறு கூறாயே.
(திருவாய்மொழி - 6.10.1)
உலகம் உண்ட பெருவாயா ! உலப்பில் கீர்த்தி அம்மானே !
நிலவும் சுடர்சூழ் ஒளிமூர்த்தி ! நெடியாய் ! அடியேன் ஆருயிரே !
திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே !
குலதொல் அடியேன் உனபாதம் கூடும் ஆறு கூறாயே.
(திருவாய்மொழி - 6.10.1)
ulagam unDa peru vaayaa ! ulapil keerththi ammaane !
nilavum sudar soozh oLi moorthy ! nediyaay ! adiyEn aaruyire !
thiladham ulagukkaai ninRa thiruvEngadaththu emperumaanE !
kula thol adiyEn una paadham koodum aaRu kooRaayE.
(Thiruvaimozhi - 6.10.1)
ஊழிக் காலத்தில் ஏற்படும் அழிவில் இருந்து உலகில் உள்ள உயிர்களை எல்லாம் காக்கும் பொருட்டு, பெரிய வாயினால் இந்த உலகத்தை விழுங்கி வயிற்றில் வைத்துக் காக்கும் கருணை வடிவானவனே ! அடியார்களிடம் வாத்சல்யம், அண்டியவர்களுக்கு அபயமளித்தல், உண்மை, வாக்குத் தவறாமை, என்று சகல வித நற்குணங்களும், அவற்றோடு அல்லாமல், காண்போர் கண்ணும், மனமும், உயிரும் பறிபோகும் விதத்தில் அமைந்த வடிவழகும் உடைய என் நாதனே ! உன் கீர்த்திக்கு ஓர் எல்லை இல்லையே ! சுடர் மிக்கதாய் எப்பொழுதும் ஒளிமயமான மூர்த்தியாகக் காட்சி அளிப்பவனே ! உயர்ந்தவனே ! அடியேனுடைய ஆருயிரே ! உலகுக்குத் திலகம் என நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே ! வழி வழியாக உனக்கு அடிமை செய்யும் தொன்மையான குலத்தில் பிறந்த எனக்கு உன் திருவடிகளைப் பிரிந்து உயிர் தரிக்க இயலாது. ஆதலால் உன் திருவடிகளைச் சேரும் உபாயம் என்ன என்று கூற வேண்டும்.
உலப்பு - முடிவு
உலப்பில் கீர்த்தி - உலப்பு இல்லாத பெரும் புகழ்
நிலவும் - எப்பொழுதும் நிலத்திருக்கும்
திலதம் - திலகம்; நெற்றிப் பொட்டு
அம்மான் - தலைவன்; சுவாமி
தொல் - தொன்மை; பழமை
ஆறு - வழி
O Lord of eternal glory who swallowed the earth !
O great icon of effulgent knowledge, my soul's Master !
You stand like a "Tilaka for the earth" in Vengadam.
Pray decree that this bonded serf reaches Your lotus feet.

ஏனோ மனமே இனிமேலாகிலும்
எம்பெருமானாரை பஜியாயோ !
வானோர்க்கு அமுதீந்த தீனசரண்யனை
தானே பஜித்து தாலாட்டினாராம் ! (ஏனோ)

திருநாராயண புரத்தில் வந்து
திருநாரணரை பஜித்தாராம் !
திருமகள் யதுகிரி தாயாரை நெஞ்சில்
திருத்தமாய் துதித்து பஜித்தாராம் ! (ஏனோ)
அம்புயக் கண்ணன் சம்பத் குமாரனை
அன்புடன் மடியில் வைத்து ஆதரித்தார் !
துன்பங்கள் போக்கிடும் அன்பர்கள் நாதனை
தன்புதல்வன் போல் ஆதரித்தாராம் ! (ஏனோ)
"செல்லப்பிள்ளை" என்றொருதரம் சொல்லிட
தொல்லைகள் யாவும் தொலைந்திடுமாம் !
வள்ளலை சயனத்தில் பல்லவ சயனத்தோடு
உள்ளம் பூரித்துத் தாலாட்டினாராம் ! (ஏனோ)

ராகம்: செஞ்சுருட்டி
ஆதிசேஷன் அம்சமடி ! ஆண்டாளின் அண்ணனடி !
ஆளவந்தார்க்கடிமையடி - கிளியே !
எங்கள் இராமானுசனடி ! கிளியே !
ஸ்வாமி யதிராஜனடி !
அரங்கனின் அடிமையடி ! வேங்கடத்து வேதியனடி !
பெரும்புதூர் வள்ளலடி - கிளியே !
எங்கள் இராமானுசனடி ! கிளியே !
ஸ்வாமி யதிராஜனடி !
தேவராஜ தாசனடி ! பார்த்தசாரதி புத்ரனடி !
பாருக்கெல்லாம் தெய்வமடி - கிளியே !
எங்கள் இராமானுசனடி ! கிளியே !
ஸ்வாமி யதிராஜனடி !

நாரணனைக் காட்டினான்டி ! செல்வபிள்ளைக்குத் தந்தையடி !
வயிரமுடி சாற்றினாண்டி - கிளியே !
எங்கள் இராமானுசனடி ! கிளியே !
ஸ்வாமி யதிராஜனடி !
சென்னியில் சூடுவாரை வைகுந்தத்தில் வாழ வைக்கும்
உய்யும் வழி அதுவே --- கிளியே !
எங்கள் இராமானுசனடி -- அது
யதிராஜன் திருவடியே !
