அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்:

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 9

எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்;
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே.

(திருவாய்மொழி - 10.9.4)

மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
போதுமின், எமது இடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர், கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வி உள் மடுத்தே.

(திருவாய்மொழி - 10.9.5)

வேள்வி உள்மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள், வலம்புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆள்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே.

(திருவாய்மொழி - 10.9.6)

மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர்; தொடு கடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணிமுடி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே.

(திருவாய்மொழி - 10.9.7)

குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று
முடி உடை வானவர் முறை முறை எதிர்கொள்ள
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடிவு உடை மாதவன் வைகுந்தம் புகவே.

(திருவாய்மொழி - 10.9.8)

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுத என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே.

(திருவாய்மொழி - 10.9.9)

விதிவகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே.

(திருவாய்மொழி - 10.9.10)

வந்து அவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தம் இல் பேரின்பத்து அடியரோடு இருந்தமை
கொந்து அலர் பொழில் குருகூர் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே.

(திருவாய்மொழி - 10.9.11)

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

முனியே ! நான்முகனே ! முக்கண் அப்பா ! என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே ! என் கள்வா !
தனியேன் ஆர் உயிரே ! என் தலைமிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே.

(திருவாய்மொழி - 10.10.1)

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

மாயம் செய்யேல் என்னை; உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை; நின் ஆணை கண்டாய்;
நேசம் உன்னோடு என்னை உயிர் வேறு இன்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய்; என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ.

(திருவாய்மொழி - 10.10.2)

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com