Responsive image

Songs

பெரிய திருமொழி.676

பாசுர எண்: 1623

பாசுரம்
வானவர்தம் துயர்தீர வந்து தோன்றி
மாணுருவாய் மூவடிமா வலியை வேண்டி,
தானமர வேழுலகு மளந்த வென்றித்
தனிமுதல்சக் கரப்படையென் தலைவன் காண்மின்,
தேனமரும் பொழில்தழுவு மெழில்கொள் வீதிச்
செழுமாட மாளிகைகள் கூடந் தோறும்,
ஆனதொல்சீர் மறையாளர் பயிலும் செல்வத்
தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே 7.8.6

பெரிய திருமொழி.677

பாசுர எண்: 1624

பாசுரம்
பந்தணைந்த மெல்விரலாள் சீதைக் காகிப்
பகலவன்மீ தியங்காத இலங்கை வேந்தன்,
அந்தமில்திண் கரம்சிரங்கள் புரண்டு வீழ
அடுகணையா லெய்துகந்த அம்மான் காண்மின்,
செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர்
திசைமுகனே யனையவர்கள் செம்மை மிக்க,
அந்தணர்த மாகுதியின் புகையார் செல்வத்
தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே 7.8.7

பெரிய திருமொழி.678

பாசுர எண்: 1625

பாசுரம்
கும்பமிகு மதவேழம் குலையக் கொம்பு
பறித்துமழ விடையடர்த்துக் குரவை கோத்து,
வம்பவிழும் மலர்க்குழலா ளாய்ச்சி வைத்த
தயிர்வெண்ணெ யுண்டுகந்த மாயோன் காண்மின்,
செம்பவள மரகதநன் முத்தம் காட்டத்
திகழ்பூகம் கதலிபல வளம்மிக் கெங்கும்,
அம்பொன்மதிள் பொழில்புடைசூழ்ந் தழகார் செல்வத்
தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே 7.8.8

பெரிய திருமொழி.679

பாசுர எண்: 1626

பாசுரம்
ஊடேறு கஞ்சனொடு மல்லும் வில்லும்
ஒண்கரியு முருள்சகடு முடையச் செற்ற,
நீடேறு பெருவலித்தோ ளுடைய வென்றி
நிலவுபுகழ் நேமியங்கை நெடியோன் காண்மின்,
சேடேறு பொழில்தழுவு மெழில்கொள் வீதித்
திருவிழவில் மணியணிந்த திண்ணை தோறும்
ஆடேறு மலர்க்குழலார் பயிலும் செல்வத்
தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே 7.8.9

பெரிய திருமொழி.68

பாசுர எண்: 1015

பாசுரம்
நாத்தழும்பநான்முகனும் ஈசனுமாய்முறையால்
ஏத்த, அங்கோராளரியாய் இருந்தவம்மானதிடம்,
காய்த்தவாகைநெற்றொலிப்பக் கல்லதர்வேய்ங்கழைபோய்,
தேய்த்ததீயால்விண்சிவக்கும் சிங்கவேள்குன்றமே. 1.7.8

Summary

The four-faced Brahma and Siva alternately chant the Lord’s names till their tongues swell. The Lord who catne as man-lion resides in Singavel-Kundram where dry pods  of the Vagai ‘tree sway and rattle while bamboo thickets amid rocks, rub and create fire that paints the sky red.

பெரிய திருமொழி.680

பாசுர எண்: 1627

பாசுரம்
பன்றியாய் மீனாகி யரியாய்ப் பாரைப்
படைத்துக்காத் துண்டுமிழ்ந்த பரமன் றன்னை,
அன்றமரர்க் கதிபதியும் அயனும் சேயும்
அடிபணிய அணியழுந்தூர் நின்ற கோவை,
கன்றிநெடு வேல்வலவ னாலி நாடன்
கலிகன்றி யொலிசெய்த வின்பப் பாடல்,
ஒன்றினொடு நான்குமோ ரைந்தும் வல்லார்
ஒலிகடல்சூ ழுலகாளு மும்பர் தாமே. (2) 7.8. 10

பெரிய திருமொழி.681

பாசுர எண்: 1628

பாசுரம்
கள்ளம்மனம் விள்ளும்வகை கருதிக்கழல் தொழுவீர்
வெள்ளம்முது பரவைத்திரை விரிய,கரை யெங்கும்
தெள்ளும்மணி திகழும்சிறு புலியூர்ச்சல சயனத்
துள்ளும்,என துள்ளத்துளு முறைவாரையுள் ளீரே (2) 7.9.1

பெரிய திருமொழி.682

பாசுர எண்: 1629

பாசுரம்
தெருவில்திரி சிறுநோன்பியர் செஞ்சோற்றொடு கஞ்சி
மருவி,பிரிந் தவர்வாய்மொழி மதியாதுவந் தடைவீர்,
திருவில்பொலி மறையோர்ச்சிறு புலியூர்ச்சல சயனத்து,
உருவக்குற ளடிகளடி யுணர்மின்னுணர் வீரே 7.9.2

பெரிய திருமொழி.683

பாசுர எண்: 1630

பாசுரம்
பறையும்வினை தொழுதுய்மின்நீர் பணியும்சிறு தொண்டீர்.
அறையும்புன லொருபால்வய லொருபால்பொழி லொருபால்
சிறைவண்டின மறையும்சிறு புலியூர்ச்சல சயனத்
துறையும்,இறை யடியல்லதொன் றிறையும்மறி யேனே 7.9.3

பெரிய திருமொழி.684

பாசுர எண்: 1631

பாசுரம்
வானார்மதி பொதியும்சடை மழுவாளியொ டொருபால்,
தானாகிய தலைவன்னவன் அமரர்க்கதி பதியாம்
தேனார்பொழில் தழுவும்சிறு புலியூர்ச்சல சயனத்
தானாயனது, அடியல்லதொன் றறியேனடி யேனே 7.9.4

Enter a number between 1 and 4000.