Responsive image

Songs

பெரிய திருமொழி.64

பாசுர எண்: 1011

பாசுரம்
எவ்வம்வெவ்வேல்பொன்பெயரோன் ஏதலினின்னுயிரை
வவ்வி, ஆகம்வள்ளுகிரால் வகிர்ந்தவம்மானதிடம்,
கவ்வுநாயும்கழுகும் உச்சிபோதொடுகால்சுழன்று,
தெய்வமல்லால்செல்லவொண்ணாச் சிங்கவேள்குன்றமே. 1.7.4

Summary

The terrible Asura Hiranya’s chest was torn with sharp claws, and he was killed, by the Lord in Singavel-Kundram where hounds, vulnires and the blazing Sun greet devotees who falter through the impenetrable path.

பெரிய திருமொழி.640

பாசுர எண்: 1587

பாசுரம்
பூமாண்சேர் கருங்குழலார் போல்நடந்து
வயல்நின்ற பெடையோடு, அன்னம்
தேமாவின் இன்னிழலில் கண்டுயிலும்
தண்சேறை யம்மான் றன்னை,
வாமான்தேர்ப் பரகாலன் கலிகன்றி
ஒலிமாலை கொண்டு தொண்டீர்,
தூமாண்சேர் பொன்னடிமேல் சூட்டுமின் நும்
துணைக்கையால் தொழுது நின்றே. (2) 7.4.10

பெரிய திருமொழி.641

பாசுர எண்: 1588

பாசுரம்
தந்தை காலில் பெருவி
லங்கு தாளவிழ, நள்ளிருட்கண்
வந்த எந்தை பெருமானார்
மருவி நின்ற வூர்போலும்,
முந்தி வானம் மழைபொழியும்
மூவா வுருவில் மறையாளர்
அந்தி மூன்று மனலோம்பும்
அணியார் வீதி அழுந்தூரே. (2) 7.5.1

பெரிய திருமொழி.642

பாசுர எண்: 1589

பாசுரம்
பாரித் தெழுந்த படைமன்னர்
தம்மை யாள, பாரதத்துத்
தேரில் பாக னாயூர்ந்த
தேவ தேவ னூர்போலும்,
நீரில் பணைத்த நெடுவாளைக்
கஞ்சிப் போன குருகினங்கள்,
ஆரல் கவுளோ டருகணையும்
அணியார் வயல்சூழ் அழுந்தூரே 7.5.2

பெரிய திருமொழி.643

பாசுர எண்: 1590

பாசுரம்
செம்பொன் மதிள்சூழ் தென்னிலங்கைக்
கிறைவன் சிரங்கள் ஐயிரண்டும்,
உம்பர் வாளிக் கிலக்காக
உதிர்த்த வுரவோ னூர்போலும்,
கொம்பி லார்ந்த மாதவிமேல்
கோதி மேய்ந்த வண்டினங்கள்,
அம்ப ராவும் கண்மடவார்
ஐம்பா லணையும் அழுந்தூரே 7.5.3

பெரிய திருமொழி.644

பாசுர எண்: 1591

பாசுரம்
வெள்ளத் துள்ளோ ராலிலைமேல்
மேவி யடியேன் மனம்புகுந்து,என்
உள்ளத் துள்ளும் கண்ணுள்ளும்
நின்றார் நின்ற வூர்போலும்,
புள்ளுப் பிள்ளைக் கிரைதேடிப்
போன காதல் பெடையோடும்,
அள்ளல் செறுவில் கயல்நாடும்
அணியார் வயல்சூழ் அழுந்தூரே 7.5.4

பெரிய திருமொழி.645

பாசுர எண்: 1592

பாசுரம்
பகலு மிரவும் தானேயாய்ப்
பாரும் விண்ணும் தானேயாய்,
நிகரில் சுடரா யிருளாகி
நின்றார் நின்ற வூர்போலும்,
துகிலின் கொடியும் தேர்த்துகளும்
துன்னி மாதர் கூந்தல்வாய்,
அகிலின் புகையால் முகிலேய்க்கும்
அணியார் வீதி அழுந்தூரே 7.5.5

பெரிய திருமொழி.646

பாசுர எண்: 1593

பாசுரம்
ஏடி லங்கு தாமரைபோல்
செவ்வாய் முறுவல் செய்தருளி,
மாடு வந்தென் மனம்புகுந்து
நின்றார் நின்றா வூர்போலும்,
நீடு மாடத் தனிச்சூலம்
போழக் கொண்டல் துளிதூவ,
ஆட லரவத் தார்ப்போவா
அணியார் வீதி அழுந்தூரே 7.5.6

பெரிய திருமொழி.647

பாசுர எண்: 1594

பாசுரம்
மாலைப் புகுந்து மலரணைமேல்
வைகி யடியேன் மனம்புகுந்து,என்
நீலக் கண்கள் பனிமல்க
நின்றார் நின்ற வூர்போலும்
வேலைக் கடல்போல் நெடுவீதி
விண்தோய் சுதைவெண் மணிமாடத்து,
ஆலைப் புகையால் அழல்கதிரை
மறைக்கும் வீதி அழுந்தூரே 7.5.7

பெரிய திருமொழி.648

பாசுர எண்: 1595

பாசுரம்
வஞ்சி மருங்கு லிடைநோவ
மணந்து நின்ற கனவகத்து,என்
நெஞ்சு நிறையக் கைகூப்பி
நின்றார் நின்ற வூர்போலும்,
பஞ்சி யன்ன மெல்லடிநற்
பாவை மார்கள், ஆடகத்தின்
அஞ்சி லம்பி னார்ப்போவா
அணியார் வீதி அழுந்தூரே 7.5.8

Enter a number between 1 and 4000.