Responsive image

Songs

பெரிய திருமொழி.595

பாசுர எண்: 1542

பாசுரம்
குடையா வரையால் நிரைமுன் காத்த
பெருமான் மருவாத
விடைதா னேழும் வென்றான் கோவல்
நின்றான் தென்னிலங்கை
அடையா அரக்கர் வீயப் பொருது
ே மவி வெங்கூற்றம்
நடையா வுண்ணக் கண்டான் நாமம்
நமோநா ராயணமே (6.10.5)

பெரிய திருமொழி.596

பாசுர எண்: 1543

பாசுரம்
கான எண்கும் குரங்கும் முசுவும்
படையா அடலரக்கர்
மான மழித்து நின்ற வென்றி
அம்மான் எனக்கென்றும்
தேனும் பாலும் அமுது மாய
திருமால் திருநாமம்
நானும் சொன்னேன் நமரு முரைமின்
நமோநா ராயணமே (6.10.6)

பெரிய திருமொழி.597

பாசுர எண்: 1544

பாசுரம்
நின்ற வரையும் கிடந்த கடலும்
திசையு மிருநிலனும்
ஒன்று மொழியா வண்ண மெண்ணி
நின்ற அம்மானார்
குன்று குடையா வெடுத்த அடிக
ளுடைய திருநாமம்
நன்று காண்மின் தொண்டீர் சொன்னேன்
நமோநா ராயணமே (6.10.7)

பெரிய திருமொழி.598

பாசுர எண்: 1545

பாசுரம்
கடுங்கால் மாரி கல்லே பொழிய
அல்லே யெமக்கென்று
படுங்கால் நீயே சரணென் றாயர்
அஞ்ச அஞ்சாமுன்
நெடுங்கால் குன்றம் குடையொன் றேந்தி
நிரையைச் சிரமத்தால்
நடுங்கா வண்ணம் காத்தான் நாமம்
நமோநா ராயணமே (6.10.8)

பெரிய திருமொழி.599

பாசுர எண்: 1546

பாசுரம்
பொங்கு புணரிக் கடல்சூ ழாடை
நிலமா மகள்மலர்மா
மங்கை பிரமன் சிவனிந் திரன்வா
னவர்நா யகராய்
எங்க ளடிக ளிமையோர் தலைவ
ருடைய திருநாமம்
நங்கள் வினைகள் தவிர வுரைமின்
நமோநா ராயணமே (6.10.9)

பெரிய திருமொழி.6

பாசுர எண்: 953

பாசுரம்
எம்பிரான் எந்தை என்னுடைச்சுற்றம்
எனக்கரசு என்னுடைவாணாள்,
அம்பினால் அரக்கர்வெருக்கொளநெருக்கி
அவருயிர்செகுத்தவெம்மண்ணல்,
வம்புலாஞ்சோலைமாமதிள் தஞ்சை
மாமணிக்கோயிலேவணங்கி,
நம்பிகாள் உய்யநான் கண்டு கொண்டேன்
நாராயணாவென்னும்நாமம். (2)      1.1.6

Summary

My Lord, my Father, my kith and kin, my Liege, my remaining days, O! you shot an arrow, on Rakshasas-clan, and rid the world of a burden! I offered worship, in Tanjai Mamani, temple with walls and flowers groves. O Friends, believe me, — I found the Mantra, Narayana is the good name.

பெரிய திருமொழி.60

பாசுர எண்: 1007

பாசுரம்
ஏதம்வந்தணுகாவண்ணநாமெண்ணி யெழுமினோதொழுதுமென்று, இமையோர்
நாதன்வந்திரைஞ்சும் நைமிசாரணியத்தெந்தையைச்சிந்தையுள்வைத்து,
காதலேமிகுத்தகலியன்வாயொலிசெய் மாலைதாம்கற்றுவல்லார்கள்,
ஓதநீர்வையகமாண்டுவெண்குடைக்கீழ் உம்பருமாகுவர்த்தாமே. 1.6.10

Summary

“Gather O celestials, let us chant and praise him, never letting despair come to close us”, Indra leading other gods, to the worship of the Lord Naimisaraniyam Resident O! Kaliyan’s heart is love in abundance,-those who can master and sing his Garland of poems set, will be the rulers, of the Earth and Heaven both.

பெரிய திருமொழி.600

பாசுர எண்: 1547

பாசுரம்
வாவித் தடஞ்சூழ் மணிமுத் தாற்று
நறையூர் நெடுமாலை
நாவில் பரவி நெஞ்சில் கொண்டு
நம்பி நாமத்தை
காவித் தடங்கண் மடவார் கேள்வன்
கலிய னொலிமாலை
மேவிச் சொல்ல வல்லார் பாவம்
நில்லா வீயுமே (6.10.10)

பெரிய திருமொழி.601

பாசுர எண்: 1548

பாசுரம்
கறவா மடநாகுதன் கன்றுள்ளி னாற்போல்,
மறவா தடியே னுன்னையே யழைக்கின்றேன்,
நறவார் பொழில்சூழ் நறையூர் நின்ற நம்பி,
பிறவாமை யெனைப்பணி யெந்தை பிரானே. (2) 7.1.1

பெரிய திருமொழி.602

பாசுர எண்: 1549

பாசுரம்
வற்றா முதுநீரொடு மால்வரை யேழும்,
துற்றா முன்துற்றிய தொல்புக ழோனே,
அற்றே னடியே னுன்னையே யழைக்கின்றேன்,
பெற்றே னருள்தந்திடு என் எந்தை பிரானே. 7.1.2

Enter a number between 1 and 4000.