Responsive image

Songs

பெரிய திருமொழி.577

பாசுர எண்: 1524

பாசுரம்
கட்டேறு நீள்சோலைக் காண்டவத்தைத் தீமூட்டி
விட்டானை மெய்யம் அமர்ந்த பெருமானை
மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் வண்துவரை
நட்டானை நாடி நறையூரில் கண்டேனே (6.8.7)

பெரிய திருமொழி.578

பாசுர எண்: 1525

பாசுரம்
மண்ணின்மீ பாரங் கெடுப்பான் மறமன்னர்
பண்ணின்மேல் வந்த படையெல்லாம் பாரதத்து
விண்ணின்மீ தேற விசயன்தே ரூர்ந்தானை
நண்ணிநான் நாடி நறையூரில் கண்டேனே (6.8.8)

பெரிய திருமொழி.579

பாசுர எண்: 1526

பாசுரம்
பொங்கேறு நீள்சோதிப் பொன்னாழி தன்னோடும்
சங்கேறு கோலத் தடக்கைப் பெருமானை
கொங்கேறு சோலைக் குடந்தைக் கிடந்தானை
நங்கோனை நாடி நறையூரில் கண்டேனே (6.8.9)

பெரிய திருமொழி.58

பாசுர எண்: 1005

பாசுரம்
ஏவினார்க்கலியார்னலிகவென்றென்மேல் எங்ஙணேவாழுமாறு?, ஐவர்
கோவினார்செய்யுக்கொடுமையைமடித்தேன் குறுங்குடிநெடுங்கடல்வண்ணா.,
பாவினாரின்சொல்பன்மலர்க்கொண்டு உன்பாதமேபரவிநான் பணிந்து, என்
நாவினால்வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். 1.6.8

Summary

Kaliyar did set the five sense-organs on me saying go and torture him to the core.  O Kurungudi Lord deep-as-the-ocean hue you defended me from the tyrants.  Chanting and singing with so many flowers buds offering worship to your feet, O! Through my poems now, I have come to your feet Naimisaraniyam-living Lord, O1

பெரிய திருமொழி.580

பாசுர எண்: 1527

பாசுரம்
மன்னு மதுரை வசுதேவர் வாழ்முதலை
நன்னறையூர் நின்ற நம்பியை வம்பவிழ்தார்
கன்னவிலும் தோளான் கலிய னொலிவல்லார்
பொன்னுலகில் வானவர்க்குப் புத்தேளி ராகுவரே (6.8.10)

பெரிய திருமொழி.581

பாசுர எண்: 1528

பாசுரம்
பெடையடர்த்த மடவன்னம் பிரியாது, மலர்க்கமலம்
மடலெடுத்து மதுநுகரும் வயலுடுத்த திருநறையூர்
முடையடர்த்த சிரமேந்தி மூவுலகும் பலிதிரிவோன்
இடர்கெடுத்த திருவாள னிணையடியே யடைநெஞ்சே. (6.9.1)

பெரிய திருமொழி.582

பாசுர எண்: 1529

பாசுரம்
கழியாரும் கனசங்கம் கலந்தெங்கும் நிறைந்தேறி
வழியார முத்தீன்று வளங்கொடுக்கும் திருநறையூர்
பழியாரும் விறலரக்கன் பருமுடிக ளவைசிதற
அழலாறும் சரந்துரந்தான் அடியிணையே யடைநெஞ்சே. (6.9.2)

பெரிய திருமொழி.583

பாசுர எண்: 1530

பாசுரம்
சுளைகொண்ட பலங்கனிகள் தேன்பாய கதலிகளின்
திளைகொண்ட பழம்கெழுமு திகழ்சோலைத் திருநறையூர்
வளைகொண்ட வண்ணத்தன் பின்தோன்றல் மூவுலகோடு
அளைவெண்ணெ யுண்டான்தன் அடியிணையே யடைநெஞ்சே. (6.9.3)

பெரிய திருமொழி.584

பாசுர எண்: 1531

பாசுரம்
துன்றோளித் துகில்படலம் துன்னியெங்கும் மாளிகைமேல்
நின்றார வான்மூடும் நீள்செல்வத் திருநறையூர்
மன்றாரக் குடமாடி வரையெடுத்து மழைதடுத்த
குன்றாரும் திரடோளன் குரைகழலே யடைநெஞ்சே. (6.9.4)

பெரிய திருமொழி.585

பாசுர எண்: 1532

பாசுரம்
அகிற்குறடுஞ்சந்தனமும் அம்பொன்னும் மணிமுத்தும்
மிகக்கொணர்ந்து திரையுந்தும் வியன்பொன்னித் திருநறையூர்
பகற்fகரந்த சுடராழிப் படையான் இவ்வுலகேழும்
புகக்கரந்த திருவயிற்றன் பொன்னடியே யடைநெஞ்சே. (6.9.5)

Enter a number between 1 and 4000.