Responsive image

Songs

பெரிய திருமொழி.559

பாசுர எண்: 1506

பாசுரம்
தாராளன் தண்ணரங்க வாளன் பூமேல்
தனியாளன் முனியாள ரேத்தநின்ற
பேராளன் ஆயிரம்பே ருடைய வாளன்
பின்னைக்கு மணவாளன் பெருமைகேட்பீர்,
பாராள ரவரிவரென் றழுந்தை யேற்ற
படைமன்ன ருடல்துணியப் பரிமா வுய்த்த
தேராளன் கோச்சோழன் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6.6.9)

பெரிய திருமொழி.56

பாசுர எண்: 1003

பாசுரம்
கோடியமனத்தால்சினத்தொழில்புரிந்து திரிந்துநாயினத்தொடுந்திளைத்திட்டு,
ஓடியுமுழன்றுமுயிர்களேகொன்றேன் உணர்விலேனாதலால், நமனார்
பாடியைப்பெரிதும் பரிசழித்திட்டேன் பரமனே. பாற்கடல்கிடந்தாய்.,
நாடிநான்வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். 1.6.6

Summary

Bearing a crooked heart, doing things in anger, I did roam with hounds and enjoy it. Pursuing frightened creatures I killed them, without any thought for the poor ones! O Lord reclining in the mighty ocean, I have erased Yama-Dharma’s citadel.  Searching myself well, I have come to your feet Naimisaraniyam-living Lord, O!

பெரிய திருமொழி.560

பாசுர எண்: 1507

பாசுரம்
செம்மொழிவாய் நால்வேத வாணர் வாழும்
திருநறையூர் மணிமாடச் செங்கண்மாலை
பொய்ம் மொழியொன் றில்லாத மெய்ம்மை யாளன்
புலமங்கைக் குலவேந்தன் புலமையார்ந்த
அம்மொழிவாய்க் கலிகன்றி யின்பப் பாடல்
பாடுவார் வியனுலகில் நமனார்பாடி
வெம்மொழிகேட் டஞ்சாதே மெய்ம்மை சொல்லில்
விண்ணவர்க்கு விருந்தாகும் பெருந்தக்கோரே (6.6.10)

பெரிய திருமொழி.561

பாசுர எண்: 1508

பாசுரம்
ஆளும் பணியு மடியேனைக்
கொண்டான் விண்ட நிசாசரரை
தோளும் தலையும் துணிவெய்தச்
சுடுவெஞ் சிலைவாய்ச் சரந்துரந்தான்
வேளும் சேயு மனையாரும்
வேற்க ணாரும் பயில்வீதி
நாளும் விழவி னொலியோவா
நறையூர் நின்ற நம்பியே (6.7.1)

பெரிய திருமொழி.562

பாசுர எண்: 1509

பாசுரம்
முனியாய் வந்து மூவெழுகால்
முடிசேர் மன்ன ருடல்துணிய
தனிவாய் மழுவின் படையாண்ட
தாரார் தோளான், வார்புறவில்
பனிசேர் முல்லை பல்லரும்பப்
பான லொருபால் கண்காட்ட
நனிசேர் கமலம் முகங்காட்டும்
நறையூர் நின்ற நம்பியே (6.7.2)

பெரிய திருமொழி.563

பாசுர எண்: 1510

பாசுரம்
தெள்ளார் கடல்வாய் விடவாய
சினவா ளரவில் துயிலமர்ந்து
துள்ளா வருமான் விழவாளி
துரந்தா னிரந்தான் மாவலிமண்
புள்ளார் புறவில் பூங்காவி
புலங்கொள் மாதர் கண்காட்ட
நள்ளார் கமலம் முகங்காட்டும்
நறையூர் நின்ற நம்பியே (6.7.3)

பெரிய திருமொழி.564

பாசுர எண்: 1511

பாசுரம்
ஓளியா வெண்ணெ யுண்டானென்
றுரலோ டாய்ச்சி யொண்கயிற்றால்
விளியா ஆர்க்க ஆப்புண்டு
விம்மி யழுதான் மென்மலர்மேல்
களியா வண்டு கள்ளுண்ணக்
காமர் தென்றல் அலர்தூற்ற
நளிர்வாய் முல்லை முறுவலிக்கும்
நறையூர் நின்ற நம்பியே (6.7.4)

பெரிய திருமொழி.565

பாசுர எண்: 1512

பாசுரம்
வில்லார் விழவில் வடமதுரை
விரும்பி விரும்பா மல்லடர்த்து
கல்லார் திரடோள் கஞ்சனைக்
காய்ந்தான் பாய்ந்தான் காளியன்மேல்
சொல்லார் சுருதி முறையோதிச்
சோமுச் செய்யும் தொழிலினோர்
நல்லார் மறையோர் பலர்வாழும்
நறையூர் நின்ற நம்பியே (6.7.5)

பெரிய திருமொழி.566

பாசுர எண்: 1513

பாசுரம்
வள்ளி கொழுநன் முதலாய
மக்க ளோடு முக்கண்ணான்
வெள்கி யோட விறல்வாணன்
வியன்தோள் வனத்தைத் துணித்துகந்தான்
பள்ளி கமலத் திடைப்பட்ட
பகுவா யலவன் முகம்நோக்கி
நள்ளியூடும் வயல்சூழ்ந்த
நறையூர் நின்ற நம்பியே (6.7.6)

பெரிய திருமொழி.567

பாசுர எண்: 1514

பாசுரம்
மிடையா வந்த வேல்மன்னர்
வீய விசயன் தேர்கடவி,
குடையா வரையொன் றெடுத்தாயர்
கோவாய் நின்றான் கூராழிப்
படையான் வேதம் நான்கைந்து
வேள்வி யங்க மாறிசையேழ்
நடையா வல்ல அந்தணர்வாழ்
நறையூர் நின்ற நம்பியே (6.7.7)

Enter a number between 1 and 4000.