Songs
பெரிய திருமொழி.55
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1002
பாசுரம்
இடும்பையாலடர்ப்புண்டிடுமினோதுற்றென்னு இரந்தவர்க்கில்லையேயென்று,
நெடுஞ்சொலால்மனுத்தநீசனேனந்தோ. நினைக்கிலேன் வினைப்பயன் தன்னை,
கடுஞ்சொலார்க்கடியார்க்காலனார் தமரால் படுவதோர் கொடுமிறைக்கஞ்சி,
நடுங்கிநான்வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். 1.6.5
Summary
Those who when starving, seeking a morsel, came to me, but I gave them nothing. Hard-hearted cold one, lowly this self O, — thoughtless of the fruit of my action. Hot-spoken Time-Lord, cruel and nasty, —fearing his terrible tortures, Trembling and panting. I have come to; your feet Naimisaraniyam-living Lord, O!
பெரிய திருமொழி.550
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1497
பாசுரம்
தாமத் துளப நீண்முடி
மாயன் தான்நின்ற
நாமத் திரள்மா மாளிகை
சூழ்ந்த நறையூர்மேல்,
காமக் கதிர்வேல் வல்லான்
கலிய னொலிமாலை,
சேமத் துணையாம் செப்பு
மவர்க்குத் திருமாலே (6.5.10)
பெரிய திருமொழி.551
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1498
பாசுரம்
அம்பரமும் பெருநிலனும் திசைக ளெட்டும்
அலைகடலும் குலவரையும் உண்டகண்டன்,
கொம்பமரும் வடமரத்தி னிலைமேல் பள்ளி
கூடினான் திருவடியே கூடிகிற்பீர்,
வம்பவிழும் செண்பகத்தின் வாச முண்டு
மணிவண்டு வகுளத்தின் மலர்மேல்வைகு,
செம்பியன்கோச் செங்கணான் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6.6.1)
பெரிய திருமொழி.552
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1499
பாசுரம்
கொழுங்கயலாய் நெடுவெள்ளங் கொண்ட காலம்
குலவரையின் மீதோடி யண்டத்தப்பால்,
எழுந்தினிது விளையாடு மீச னெந்தை
இணையடிக்கீ ழினிதிருப்பீர் இனவண்டாலும்
உழும்செறுவில் மணிகொணர்ந்து கரைமேல் சிந்தி
உலகெல்லாம் சந்தனமு மகிலுங்கொள்ள,
செழும்பொன்னி வளங்கொடுக்கும் சோழன் சேர்ந்த
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6.6.2)
பெரிய திருமொழி.553
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1500
பாசுரம்
பவ்வநீ ருடையாடை யாகச் சுற்றிப்
பாரகலம் திருவடியாப் பவனம்மெய்யா
செவ்விமா திரமெட்டும் தோளா அண்டம்
திருமுடியா நின்றான்பால் செல்லகிற்பீர்
கவ்வைமா களிறுந்தி வெண்ணி யேற்றக்
கழல்மன்னர் மணிமுடிமேல் காகமேற
தெய்வவாள் வலங்கொண்ட சோழன் சேர்ந்த
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6.6.3)
பெரிய திருமொழி.554
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1501
பாசுரம்
பைங்கணா ளரியுருவாய் வெருவ நோக்கிப்
பருவரைத்தோ ளிரணியனைப் பற்றிவாங்கி
அங்கைவா ளுகிர் நுதியா லவன தாகம்
அங்குருதி பொங்குவித்தா னடிக்கீழ்நிற்பீர்
வெங்கண்மா களிறுந்தி வெண்ணியேற்ற
விறல்மன்னர் திறலழிய வெம்மாவுய்த்த
செங்கணான் கோச்சோழன் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6.6.4)
பெரிய திருமொழி.555
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1502
பாசுரம்
அன்றுலக மூன்றினையு மளந்து வேறோர்
அரியுருவா யிரணியன தாகங்கீண்டு
வென்றவனை விண்ணுலகில் செலவுய்த் தாற்கு
விருந்தாவீர் மேலெழுந்து விலங்கல் பாய்ந்து
பொன்சிதறி மணிகொணர்ந்து கரைமேல் சிந்திப்
புல ம்பரந்து நிலம்பரக்கும் பொன்னிநாடன்
தென்தமிழன் வடபுலக்கோன் சோழன் சேர்ந்த
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6.6.5)
பெரிய திருமொழி.556
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1503
பாசுரம்
தன்னாலே தன்னுருவம் பயந்த தானாய்த்
தயங்கொளிசேர் மூவுலகும் தானாய்வானாய்,
தன்னாலே தானுருவில் மூர்த்தி மூன்றாய்த்
தானாய னாயினான் சரணென்றுய்வீர்
மின்னாடு வேலேந்து விளைந்த வேளை
விண்ணேறத் தனிவேலுய்த் துலகமாண்ட
தென்னாடன் குடகொங்கன் சோழன் சேர்ந்த
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6.6.6)
பெரிய திருமொழி.557
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1504
பாசுரம்
முலைத்தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி
முதுதுவரைக் குலபதியாக் காலிப்பின்னே
இலைத்தடத்த குழலூதி யாயர் மாதர்
இனவளைகொண் டானடிக்கீ ழெய்தகிற்பீர்
மலைத்தடத்த மணிகொணர்ந்து வைய முய்ய
வளங்கொடுக்கும் வருபுனலம் பொன்னிநாடன்
சிலைத்தடக்கைக் குலச்சோழன் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6.6.7)
பெரிய திருமொழி.558
அருளியவர்: திருமங்கை_ஆழ்வார்
பெரிய_திருமொழி
பாசுர எண்: 1505
பாசுரம்
முருக்கிலங்கு கனித்துவர்வாய்ப் பின்னை கேள்வன்
மன்னெல்லாம் முன்னவியச் சென்று,வென்றிச்
செருக்களத்துத் திறலழியச் செற்ற வேந்தன்
சிரந்துணிந்தான் திருவடி_ம் சென்னிவைப்பீர்
இருக்கிலங்கு திருமொழிவா யெண்டோ ளீசற்கு
எழில்மாட மெழுபதுசெய் துலகமாண்ட
திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6.6.8)