Responsive image

Songs

பெரிய திருமொழி.522

பாசுர எண்: 1469

பாசுரம்
துறந்தே னார்வச் செற்றச்சுற்
றம்து றந்தமையால்,
சிறந்தேன் நின்னடிக்கே
யடிமை திருமாலே,
அறந்தா னாய்த்திரி வாய் உன்
னையென் மனத்தகத்தே,
திறம்பா மல்கொண் டேன்திரு
விண்ணகரானே (6.3.2)

பெரிய திருமொழி.523

பாசுர எண்: 1470

பாசுரம்
மானேய் நோக்குநல்லார்
மதிபோல்முகத்துலவும்,
ஊனேய் கண்வாளிக் குடைந்தோட்
டந்துன் னடைந்தேன்,
கோனே குறுங்குடியுள்
குழகா திருநறையூர்த்
தேனே, வருபுனல்சூழ்
திருவிண் ணகரானே (6.3.3)

பெரிய திருமொழி.524

பாசுர எண்: 1471

பாசுரம்
சாந்தேந்து மென்முலை யார்தடந்
தோள்புண ரின்பவெள்ளத்
தாழ்ந்தேன், அருநகரத்
தழுந்தும் பயன்படைத்தேன்,
போந்தேன், புண்ணியனே.
உனையெய்தியென் தீவினைகள்
தீர்ந்தேன், நின்னடைந்தேன்
திருவிண் ணகரானே (6.3.4)

பெரிய திருமொழி.525

பாசுர எண்: 1472

பாசுரம்
மற்றோர் தெய்வமெண்ணே
னுன்னையென் மனத்துவைத்துப்
பெற்றேன், பெற்றதுவும்
பிறவாமை யெம்பெருமான்,
வற்றா நீள்கடல்சூ
ழிலங்கையி ராவணனைச்
செற்றாய், கொற்றவனே.
திருவிண் ணகரானே (6.3.5)

பெரிய திருமொழி.526

பாசுர எண்: 1473

பாசுரம்
மையொண் கருங்கடலும்
நிலனு மணிவரையும்,
செய்ய சுடரிரண்டும்
இவையாய நின்னை, நெஞ்சில்
உய்யும் வகையுணர்ந்தே
_ண்மையாலினி யாது மற்றோர்
தெய்வம் பிறிதறியேன்
திருவிண் ணகரானே (6.3.6)

பெரிய திருமொழி.527

பாசுர எண்: 1474

பாசுரம்
வேறே கூறுவதுண்
டடியேன் விரித்துரைக்கு
மாறே, நீபணியா
தடைநின் திருமனத்து,
கூறேன் நெஞ்சுதன்னால்
குணங்கொண்டு மற் றோர்தெய்வம்
தேறே னுன்னையல்லால்
திருவிண் ணகரானே (6.3.7)

பெரிய திருமொழி.528

பாசுர எண்: 1475

பாசுரம்
முளிதீந்த வேங்கடத்து
மூரிப்பெ ருங்களிற்றால்,
விளிதீந்த மாமரம்போல்
வீழ்ந்தாரை நினையாதே
அளிந்தோர்ந்த சிந்தைநின்பா,
லடியேற்க்கு, வானுலகம்
தெளிந்தேயென் றெய்துவது?
திருவிண் ணகரானே (6.3.8)

பெரிய திருமொழி.529

பாசுர எண்: 1476

பாசுரம்
சொல்லாய் திருமார்வா
உனக்காகித் தொண்டுபட்ட
நல்லே னை வினைகள்
நலியாமை நம்புநம்பீ,
மல்லாகுடமாடி.
மதுசூத னே உலகில்
செல்லா நல்லிசையாய்
திருவிண் ணகரானே (6.3.9)

பெரிய திருமொழி.53

பாசுர எண்: 1000

பாசுரம்
சூதினைப்பெருக்கிக்களவினைத்துணிந்து சுரிகுழல்மடந்தையர்த்திறத்து,
காதலேமிகுத்துக்கண்டவாதிரிந்ததொண்டனேன் நமன்fதமர்செய்யும்,
வேதனைக்கொடுங்கிநடுங்கினேன் வேலைவெண்டிரையலமரக்கடைந்த,
நாதனேவந்துன் திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். 1.6.3

Summary

Gambling in excess, getting into robbery for the sake of curly coiffured damsels, increasing lewdity, without any moral code, I did fail in my worship. Fearing the torture of Yama-agents, Lord who churned the ocean! Seeking your lotus feet, I have come to see you now Naimisaraniyam-living Lord, O!

பெரிய திருமொழி.530

பாசுர எண்: 1477

பாசுரம்
தாரார் மலர்க்கமலத்
தடஞ்சூழ்ந்த தண்புறவில்,
சீரார் நெடுமறுகில்
திருவிண் ணகரானை
காரார் புயல்தடக்கைக்
கலிய னொலிமாலை,
ஆரா ரிவைவல்லார்
அவர்க்கல்லல் நில்லாவே (6.3.10)

Enter a number between 1 and 4000.