Songs
கண்ணிநுண் சிறுத்தாம்பு.1
அருளியவர்: மதுரகவி_ஆழ்வார்
கண்ணிநுண்_சிறுத்தாம்பு
பாசுர எண்: 937
பாசுரம்
கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணி யபெரு மாயன்,என் னப்பனில்,
நண்ணித் தென்குரு கூர்நம்பி யென்றக்கால்,
அண்ணிக் கும்அமு தூறுமென் நாவுக்கே. (1)
Summary
Here on a spinout leash of rope the wonder-child my Lord was held. But more, the mouth is nectar-welled when Kurugur Nambi’s name is spelled.
கண்ணிநுண் சிறுத்தாம்பு.10
அருளியவர்: மதுரகவி_ஆழ்வார்
கண்ணிநுண்_சிறுத்தாம்பு
பாசுர எண்: 946
பாசுரம்
பயனன் றாகிலும் பாங்கல ராகிலும்
செயல்நன் றாகத் திருத்திப் பணிகொள்வான்,
குயில்நின் றார்ப்பொழில் சூழ்குரு கூர்நம்பி,
முயல்கின் றேனுன்றன் மொய்கழற் கன்பையே. (10)
Summary
The useless and the worthless souls, He will take and put to meet. O, Kurugur Lord, where cuckoos haunt, I only seek to love thy feet.
கண்ணிநுண் சிறுத்தாம்பு.11
அருளியவர்: மதுரகவி_ஆழ்வார்
கண்ணிநுண்_சிறுத்தாம்பு
பாசுர எண்: 947
பாசுரம்
அன்பன் தன்னை யடைந்தவர் கட்கெல்லாம்
அன்பன், தென்குரு கூர்நகர் நம்பிக்கு,
அன்ப னாய்மது ரகவி சொன்னசொல்
நம்பு வார்ப்பதி, வைகுந்தம் காண்மினே. (11)
Summary
To those who seek the Lord’s refuge, Madurakavi who took refuge in Ten-Kurugur Nambi’s feet has this to say, “See Vaikunth here!”
கண்ணிநுண் சிறுத்தாம்பு.2
அருளியவர்: மதுரகவி_ஆழ்வார்
கண்ணிநுண்_சிறுத்தாம்பு
பாசுர எண்: 938
பாசுரம்
நாவி னால்நவிற் றின்ப மெய்தினேன்,
மேவி னேனவன் பொன்னடி மெய்ம்மையே,
தேவு மற்றறி யேன்குரு கூர்நம்பி,
பாவி னின்னிசை பாடித் திரிவனே. (2)
Summary
I spelled his name and found my joy; I served his feet and found the truth. I do not know another god; I sing his songs and roam the street.
கண்ணிநுண் சிறுத்தாம்பு.3
அருளியவர்: மதுரகவி_ஆழ்வார்
கண்ணிநுண்_சிறுத்தாம்பு
பாசுர எண்: 939
பாசுரம்
திரிதந் தாகிலும் தேவ பிரானுடை,
கரிய கோலத் திருவுருக் காண்பன்நான்,
பெரிய வண்குரு கூர்நகர் நம்பிக்காள்
உரிய னாய்,அடி யேன்பெற்ற நன்மையே. (3)
Summary
I roam but everywhere I see, my Teva-piran, his charming face. Through service to the Kurugur King, this lowly-self has found his grace.
கண்ணிநுண் சிறுத்தாம்பு.4
அருளியவர்: மதுரகவி_ஆழ்வார்
கண்ணிநுண்_சிறுத்தாம்பு
பாசுர எண்: 940
பாசுரம்
நன்மை யால்மிக்க நான்மறை யாளர்கள்,
புன்மை யாகக் கருதுவ ராதலின்,
அன்னை யாயத்த னாயென்னை யாண்டிடும்
தன்மை யான்,சட கோபனென் நம்பியே. (4)
Summary
Worthy scholars full of grace has found me worthless in my ways. But Father, Mother both in one, Satakopan now rules my days.
கண்ணிநுண் சிறுத்தாம்பு.5
அருளியவர்: மதுரகவி_ஆழ்வார்
கண்ணிநுண்_சிறுத்தாம்பு
பாசுர எண்: 941
பாசுரம்
நம்பி னேன்பிறர் நன்பொருள் தன்னையும்,
நம்பி னேன்மட வாரையும் முன்னெல்லாம்,
செம்பொன் மாடத் திருக்குரு கூர்நம்பிக்
கன்ப னாய்,அடி யேஞ்சதிர்த் தேனின்றே. (5)
Summary
The days I envied others’ pelf, and sought the love of lund dames! Now I have the Lord himself, who’s king of Kurugur city famed.
கண்ணிநுண் சிறுத்தாம்பு.6
அருளியவர்: மதுரகவி_ஆழ்வார்
கண்ணிநுண்_சிறுத்தாம்பு
பாசுர எண்: 942
பாசுரம்
இன்று தொட்டு மெழுமையு மெம்பிரான்,
நின்று தன்புக ழேத்த வருளினான்,
குன்ற மாடத் திருக்கு கூர்நம்பி,
என்று மென்னை யிகழ்விலன் காண்மினே. (6)
Summary
The Kurugur mansioned city’s king has made me sing his praise by rote. Henceforth through seven lives, He shall never fail me, note!
கண்ணிநுண் சிறுத்தாம்பு.7
அருளியவர்: மதுரகவி_ஆழ்வார்
கண்ணிநுண்_சிறுத்தாம்பு
பாசுர எண்: 943
பாசுரம்
கண்டு கொண்டென்னைக் காரிமா றப்பிரான்,
பண்டை வல்வினை பாற்றி யருளினான்,
எண்டி சையு மறிய இயம்புகேன்,
ஒண்ட மிழ்ச்சட கோப னருளையே. (7)
Summary
My Kari-Maran took a note of Karmas of my older days. I shall let the Quarters know, Satakopan-the-Tamil’s grace.
கண்ணிநுண் சிறுத்தாம்பு.8
அருளியவர்: மதுரகவி_ஆழ்வார்
கண்ணிநுண்_சிறுத்தாம்பு
பாசுர எண்: 944
பாசுரம்
அருள்கொண் டாடு மடியவ ரின்புற,
அருளி னானவ் வருமறை யின்பொருள்,
அருள்கொண் டாயிர மின்தமிழ் பாடினான்,
அருள்கண் டீரிவ் வுலகினில் மிக்கதே. (8)
Summary
For those who worship grace alone, by grace he sang the thousand songs. A bigger grace you cannot show, for he did grace the Vedas-four.