Responsive image

திருவாய்மொழி.931

பாசுர எண்: 3721

பாசுரம்
அந்தரம் நின்றுழல் கின்ற
      யானுடைப் பூவைகாள்,
நுந்திரத் தேது மிடையில்
      லைகுழ றேன்மினோ,
இந்திர ஞாலங்கள் காட்டியிவ்
      வேழுல கும்கொண்ட,
நந்திரு மார்பன் நம்மாவி
      யுண்ணநன் கெண்ணினான். 9.5.5

Summary

O My perching Mynahs!  Do not cajole! I have nothing to do with you anymore.  The Lord of Sri then took the Earth by trick; he has planned to rob my life as well

திருவாய்மொழி.932

பாசுர எண்: 3722

பாசுரம்
நன்கெண்ணி நான்வ ளர்த்த
      சிறுகிளிப் பைதலே,
இன்குரல் நீமிழிற் றேலென்
      னாருயிர்க் காகுத்தன்,
நின்செய்ய வாயொக்கும் வாயங்கண்
      ணங்கை காலினன்,
நின்பசுஞ் சாம நிறத்தன்
      கூட்டுண்டு நீங்கினான். 9.5.6

Summary

O Puerile parrot!  I have brought you up well.  Now do not start your sweet prattle. Your beak and feathers take my mind to my Lord Rama again. He enjoyed union with me then, and deserted me!

திருவாய்மொழி.933

பாசுர எண்: 3723

பாசுரம்
கூட்டுண்டு நீங்கி கோலத்
      தாமரைக் கட்செவ்வாய்,
வாட்டமி லெங்கரு மாணிக்கம்
      கண்ணன் மாயன்போல்,
கோட்டிய வில்லொடு மின்னும்
      மேகக் குழாங்கள்காள்,
காட்டேன் மின்நும் முருவென்
      னுயிர்க்கது காலனே. 9.5.7

Summary

O Dark lightning-clouds! You remind me of Krishna, He enjoyed my company, then deserted my.  Pray do not show his lotus eyes, lips and his dark hue; your form is like death to my soul

திருவாய்மொழி.934

பாசுர எண்: 3724

பாசுரம்
உயிர்க்கது காலனென் றும்மை
      யானிரந் தேற்கு,நீர்
குயிற்பைதல் காள்.கண்ணன் நாம
      மேகுழ றிக்கொன்றீர்,
தயிர்ப்ப ழஞ்சோற் றொடுபா
      லடிசிலும் தந்து,சொல்
பயிற்றிய நல்வள மூட்டினீர்
      பண்புடை யீரே. 9.5.8

Summary

O Foolish koels! I pleaded with you not to sing my Krishna’s names.  Alas, you have killed me, I gave you cruds and rice and sweet pudding, and taught you to speak. O Benevolent birds! Good reward for my labours

திருவாய்மொழி.935

பாசுர எண்: 3725

பாசுரம்
பண்புடை வண்டொடு தும்பிகாள்.
      பண்மிழற் றேன்மின்,
புண்புரை வெல்கொடு குத்தாலொக்
      கும்நும் இன்குரல்,
தண்பெரு நீர்த்தடந் தாமரை
      மலர்ந்தா லொக்கும்
கண்பெருங் கண்ணன், நம்மாவி
      யுண்டெழ நண்ணினான். 9.5.9

Summary

O Bumble-bees!  Do not hum, your music drills into my wound.  My Lord Krishna of dark hue, with large eyes like a lotus blossom in a large lake, comes only to rob me of my life

திருவாய்மொழி.936

பாசுர எண்: 3726

பாசுரம்
எழநண்ணி நாமும் நம்வான
      நாடனோ டொன்றினோம்,
பழனநன் னாரைக் குழாங்கள்
      காள்.பயின் றென்னினி,
இழைநல்ல வாக்கை யும்பைய
      வேபுயக் கற்றது,
தழைநல்ல இன்பம் தலைப்பெய்
      தெங்கும் தழைக்கவே. 9.5.10

Summary

O Good water-egrets! I desired union with the Vaikunta Lord knowingly.  This jewel body has learnt to slip away bit by bit.  Now what use flocking around me?  May joy descend and reign everywhere!

திருவாய்மொழி.937

பாசுர எண்: 3727

பாசுரம்
இன்பம் தலைப்பெய் தெங்கும்
      தழைத்தபல் லூழிக்கு,
தண்புக ழேத்தத் தனக்கருள்
      செய்த மாயனை,
தெங்குரு கூர்ச்சட கோபன்fசொல்
      லாயிரத் துள்ளிவை,
ஒன்பதோ டொன்றுக் கும்மூ
      வுலகு முருகுமே. (2) 9.5.11

Summary

This decad of the thousand songs by kurugur Satakopan blest to sing in sing, the praise of the Lord who reigns in joy everywhere, will melt the hearts of all

திருவாய்மொழி.938

பாசுர எண்: 3728

பாசுரம்
உருகுமால் செஞ்சம் உயிரின் பரமன்றி,
பெருகுமால் வேட்கையும் எஞ்செய்கேன் தொண்டனேன்,
தெருவெல்லாம் காவி கமழ்திருக் காட்கரை,
மருவிய மாயன்தன் மாயம் நினைதொறே. (2) 9.6.1

Summary

My heart melts, more than I can bear.  My love surges when I recall his wonders.  Alas, what can I a mere servant, do? He lives in Tirukkatkarai where lotus blooms abound in streets

திருவாய்மொழி.939

பாசுர எண்: 3729

பாசுரம்
நினைதொறும் சொல்லுந் தொறும்நெஞ் சிடிந்துகும்
வினைகொள்சீர் பாடிலும் வேமென தாருயிர்,
சுனைகொள்பூஞ் சோலைத்தென் காட்கரை யென்னப்பா,
நினைகிலேன் நானுனக் காட்செய்யும் நீர்மையே. 9.6.2

Summary

In every thought and every world, my heart fails.  Even when I sing your praise, my soul melts.  My Lord and Father living in lake-abounding Tirukkatkarail! I cannot think of how I am to serve you

திருவாய்மொழி.940

பாசுர எண்: 3730

பாசுரம்
நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து,என்னை
ஈர்மைசெய் தென்னுயி ராயென் னுயிருண்டான்,
சீர்மல்கு சோலைத்தென் காட்கரை யென்னப்பன்,
கார்முகில் வண்ணன்தன் கள்வம் அறிகிலேன். 9.6.3

Summary

Through goodness he deceived my heart and entered it. Then he became my soul, hurt me and took my life.  My dark hued Lord and father lives in Tirukkatkarai, I do not understand his deceits

Enter a number between 1 and 4000.