திருவாய்மொழி.821
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3611
பாசுரம்
சொல்ல மாட்டேன் அடியேனுன்
துளங்கு சோதித் திருப்பாதம்,
எல்லை யில்சீ ரிளஞாயி
றிரண்டு போலென் னுள்ளவா.,
அல்லல் என்னும் இருள்சேர்தற்
குபாயம் என்னே?, ஆழிசூழ்
மல்லல் ஞால முழுதுண்ட
மாநீர்க் கொண்டல் வண்ணனே. 8.5.5
Summary
O Dark-cloud Lord who swallowed the round Earth and waters, I cannot describe the effulgence of your radiant feet. They are like two young suns of infinite light shining in my heart. Now how can the darkness of evil every approach me?
திருவாய்மொழி.822
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3612
பாசுரம்
கொண்டல் வண்ணா. குடக்கூத்தா.
வினையேன் கண்ணா. கண்ணா,என்
அண்ட வாணா. என்றென்னை
ஆளக் கூப்பிட் டழைத்தக்கால்,
விண்டன் மேல்தான் மண்மேல்தான்
விரிநீர்க் கடல்தான் மற்றுத்தான்,
தொண்ட னேனுள் கழல்லாண
ஒருநாள் வந்து தோன்றாயே. 8.5.6
Summary
O My Krishna, dear-as-my-eyes, Lord of the universe, my Master! O Cloud-hued Lord, O Pot-dancer, my Lord, I am calling you, come from the sky, or come from the Earth, or from the Ocean, or from wherever else, but come you must, and show me your lotus feet!
திருவாய்மொழி.823
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3613
பாசுரம்
வந்து தோன்றா யன்றேலுன்
வையம் தாய மலரடிக்கீழ்,
முந்தி வந்து யான்நிற்ப
முகப்பே கூவிப் பணிகொள்ளாய்,
செந்தண் கமலக் கண்கைகால்
சிவந்த வாயோர் கருநாயிறு,
அந்த மில்லாக் கதிர்பரப்பி
அலர்ந்த தொக்கும் அம்மானே. 8.5.7
Summary
Come before me or else call me to your presence, that I may serve the lotus feet that strode the Earth, O Dark Lord resembling a black Sun of infinite lustre with glowing red spots of cool lotus eyes, lips, hands and feet!
திருவாய்மொழி.824
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3614
பாசுரம்
ஒக்கும் அம்மா னுருவமென்
றுள்ளம் குழைந்து நாணாளும்,
தொக்க மேகப் பல்குழாங்கள்
காணுந் தோறும் தொலைவன்நான்,
தக்க ஐவர் தமக்காயன்று
றீரைம் பதின்மர் தாள்சாய,
புக்க நல்தேர்த் தனிப்பாகா.
வாராய் இதுவோ பொருத்தமே? 8.5.8
Summary
Every time I see dark flocking clouds, my heart melts says “This is what my Lord looks like”, and day by day I die. O Lord who drove the chariot for the godly five in war against the wicked hundred! Come now, is this fair?
திருவாய்மொழி.825
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3615
பாசுரம்
இதுவோ பொருத்தம் மின்னாழிப்
படையாய். ஏறும் இருஞ்சிசிறைப்புள்,
அதுவே கொடியா வுயர்த்தானே.
என்றென் றேங்கி யழுதக்கால்,
எதுவே யாகக் கருதுங்கொல்
இம்மா ஞாலம் பொறைதீர்ப்பான்,
மதுவார் சோலை யுத்தர
மதுரைப் பிறந்த மாயனே? 8.5.9
Summary
I weep and call in despair, O Lord of lightning-discus, O Lord of Garuda-banner! Alas, what indeed does he intend? Did he not appear in the beautiful groves of Mathura and rid the world of its miseries?
திருவாய்மொழி.826
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3616
பாசுரம்
பிறந்த மாயா. பாரதம்
பொருத மாயா. நீயின்னே,
சிறந்த கால்தீ நீர்வான்மண்
பிறவு மாய பெருமானே,
கறந்த பாலுள் நெய்யேபோல்
இவற்று ளெங்கும் கண்டுகொள்,
இறந்து நின்ற பெருமாயா.
உன்னை எங்கே காண்கேனே? 8.5.10
Summary
O Lord who came and fought the great Bharata war! Lord who is Earth, Five, sky, wind, water and all else Lord invisible as the butter in fresh milk! Alas, where can I see you?
திருவாய்மொழி.827
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3617
பாசுரம்
எங்கே காண்கேன் ஈன்துழாய்
அம்மான் றன்னை யான்? என்றென்று
அங்கே தாழ்ந்த சொற்களால்
அந்தண் குருகூர்ச் சடகோபன்,
செங்கேழ் சொன்ன வாயிரத்துள்
இவையும் பத்தும் வல்லார்கள்,
இங்கே காண இப்பிறப்பே
மகிழ்வர் எல்லியும் காலையே. (2) 8.5.11
Summary
This decad of the beautiful thousand songs by kurugur Satakopan asking the Lord, “O Where can I see you, my sweet Tulasi-garland Lord?” –those who can sing it will enjoy bliss here and now, night and day
திருவாய்மொழி.828
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3618
பாசுரம்
எல்லியும் காலையும் தன்னை நினைந்தெழ,
நல்ல அருள்கள் நமக்கேதந் தருள்செய்வான்,
அல்லியந் தண்ணந் துழாய்முடி யப்பனூர்,
செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே. (2) 8.6.1
Summary
The Lord wearing a wreath of Tulasi blossoms, lives with fortune-favoured ones in Tirukkodittanam, Night and day worshipped with joy, he gives us grace and all else
திருவாய்மொழி.829
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3619
பாசுரம்
திருக்கடித் தானமும் என்னுடைச் சிந்தையும்,
ஒருக்கடுத் துள்ளே உறையும் பிரான்கண்டீர்,
செருக்கடுத் தன்று திகைத்த அரக்கரை,
உருக்கெட வாளி பொழிந்த ஒருவனே. 8.6.2
Summary
Look! The Lord has liked my thoughts destroyed my woes to the end. He lives to Tirukkadittanam, and lives m both in cool fragrant Tirukkadittanam, ‘This he, who showered arrows then, and we destroyed the pride filled Rakshasas
திருவாய்மொழி.830
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3620
பாசுரம்
ஒருவ ரிருவரோர் மூவ ரெனநின்று,
உருவு கரந்துள் ளுந்தோறும் தித்திப்பான்,
திருவமர் மார்வன் திருக்கடித் தானத்தை,
மருவி யுரைகின்ற மாயப் பிரானே. 8.6.3
Summary
The Lord was one, then two, then became three, then mingled himself into all, sweetly in my heart. The wonder-Lord resides in Tirukkadittanam with the dame-of-lotus Lakshmi on his chest