திருவாய்மொழி.811
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3601
பாசுரம்
எனக்குநல் லரணை எனதா ருயிரை
இமையவர் தந்தைதாய் தன்னை,
தனக்குன்தன் தன்மை அறிவரி யானைத்
தடங்கடல் பள்ளியம் மானை,
மனக்கொள்சீர் மூவா யிரவர்வண் சிவனும்
அயனும் தானுமொப் பார்வாழ்,
கனக்கொள்திண் மாடத் திருச்செங்குன் றூரில்
திருச்சிற்றா றதனுள்கண் டேனே. 8.4.6
Summary
I have found the refuge for my soul, in high mansioned Tirucchengunrur. Here he resides amid three thousand devotees with Siva and Brahma. He is father and mother to the celestials and the sages. He reclines in the deep ocean, not knowing his own nature
திருவாய்மொழி.812
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3602
பாசுரம்
திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றதனுள்
கண்டவத் திருவடி யென்றும்,
திருச்செய்ய கமலக் கண்ணூம்செவ் வாயும்
செவ்வடி யும்செய்ய கையும்,
திருச்செய்ய கமல வுந்தியும் செய்ய
கமலமார் பும்செய்ய வுடையும்,
திருச்செய்ய முடியும் ஆரமும் படையும்
திகழவென் சிந்தையு ளானே. 8.4.7
Summary
I see the lustrous Lord standing in Tirucchengunur with lotus eyes, lotus feet, lotus hands, lotus navel, and lotus chest, coral lips and red garments, and an auspicious red crown; his radiant form with ornaments and five weapons fills my heart
திருவாய்மொழி.813
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3603
பாசுரம்
திகழவென் சிந்தை யுள்ளிருந் தானைச்
செழுநிலத் தேவர்நான் மறையோர்,
திசைகைகூப்பி யேத்தும் திருச்செங்குன் றூரில்
திருச்சிற்றா றங்கரை யானை,
புகர்கொள்வா னவர்கள் புகலிடந் தன்னை
அசுரர்வன் கையர்வெங் கூற்றை,
புகழுமா றறியேன் பொருந்துமூ வுலகும்
படைப்பொடு கெடுப்புக்காப் பவனே. 8.4.8
Summary
The Lord in my thoughts resides in Tirucchengunrur, worshipped by sages and celestials. He is the refuge of devotees. He gives death to the Asuras. I know not how to praise him. He is the creator, protector, and the destroyer of the three worlds
திருவாய்மொழி.814
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3604
பாசுரம்
படைப்பொடு கெடுப்புக் காப்பவன் பிரம
பரம்பரன் சிவபெருமான் அவனே,
இடைப்புக்கோ ருருவும் ஒழிவில்லை யவனே
புகழ்வில்லை யாவையும் தானே,
கொடைப்பெரும் புகழார் இனையர்தன் னானார்
கூறிய விச்சையோ டொழுக்கம்,
நடைப்பலி யியற்கைத் திருச்செங்குன் றூரில்
திருச்சிற்றா றமர்ந்த நாதனே. 8.4.9
Summary
The Lord who is these is himself Brahma, Siva and Indra too. He fills all the worlds and is himself all of them. He resides in Tirucchengunrur, no words can praise him, -with generous nobles, scholars, craftsmen and devotees
திருவாய்மொழி.815
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3605
பாசுரம்
அமர்ந்த நாதனை யவரவ ராகி
அவர்க்கருள் அருளுமம் மானை
அமர்ந்ததண் பழனத் திருச்செங்குன் றூரில்
திருச்சிற்றாற் றங்கரை யானை,
அமர்ந்தசீர் மூவா யிரவர்வே தியர்கள்
தம்பதி யவனிதே வர்வாழ்வு,
அமர்ந்தமா யோனை முக்கணம் மானை
நான்முக னையமர்ந் தேனே. 8.4.10
Summary
The eternal Lord graces all by becoming all of them, I have attained forever the Lord who is Siva and Brahma too. He resides in Tirucchengunrur on the banks of Tirucchitraru, inspiring three thousand Vedic seers and devotees of high merit
திருவாய்மொழி.816
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3606
பாசுரம்
தேனைநன் பாலைக் கன்னலை யமுதைத்
திருந்துல குண்டவம் மானை,
வானநான் முகனை மலர்ந்தண் கொப்பூழ்
மலர்மிசைப் படைத்தமா யோனை,
கோனைவண் குருகூர்ச் வண்சட கோபன்
சொன்னவா யிரத்துளிப் பத்தும்,
வானின்மீ தேற்றி யருள்செய்து முடிக்கும்
பிறவிமா மாயக்கூத் தினையே. (2) 8.4.11
Summary
This decad of the thousand songs by kurugur Satakopan on the lotus-navel Lord, sweet as honey, milk, sugar and sap, who swallowed the Earth, -those who can sing it will end this drama and attain Heaven
திருவாய்மொழி.817
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3607
பாசுரம்
மாயக் கூத்தா. வாமனா.
வினையேன் கண்ணா. கண்கைகால்
தூய செய்ய மலர்களாச்
சோதிச் செவ்வாய் முகிழதா,
சாயல் சாமத் திருமேனி
தண்பா சடையா, தாமரைநீள்
வாசத் தடம்போல் வருவானே.
ஒருநாள் காண வாராயே. (2) 8.5.1
Summary
Vamana, my love! Your frame is a cool lotus pond, -your eyes, hands and feet are like full lotus blossoms, you radiant lips like their buds, your limbs like the dark, leaves! O Wonderful dancer, will you not come one day to see me?
திருவாய்மொழி.818
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3608
பாசுரம்
காண வாராய் என்றென்று
கண்ணும் வாயும் துவர்ந்து,அடியேன்
நாணி நன்னாட் டலமந்தால்
இரங்கி யொருநாள் நீயந்தோ,
காண வாராய் கருநாயி
றுதிக்கும் கருமா மாணிக்க,
நாணல் மலைபோல் சுடர்ச்சோதி
முடிசேர் சென்னி யம்மானே. 8.5.2
Summary
With faltering steps I roam the good Earth in shame, I call and look everywhere, with parched lips and dried tears. Alas, will you not come one day, showing your dark frame and glistering hair like a new mountain with a black Sun rising over its peaks?
திருவாய்மொழி.819
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3609
பாசுரம்
முடிசேர் சென்னி யம்மா.நின்
மொய்பூந் தாமத் தண்டுழாய்,
கடிசேர் கண்ணிப் பெருமானே.
என்றென் றேங்கி யழுதக்கால்,
படிசேர் மகரக் குழைகளும்
பவள வாயும் நால்தோளும்,
துடிசே ரிடையும் அமைந்ததோர்
தூநீர் முகில்போல் தோன்றாயே. 8.5.3
Summary
O Lord of radiant coiffure, Lord of fragrant garland, O Rain-cloud Lord, I despair and weep calling for you, Alas, I do not see you, with your befitting ear rings, your coral lips, your four arms and slender waist!
திருவாய்மொழி.820
அருளியவர்: நம்மாழ்வார்
திருவாய்மொழி
பாசுர எண்: 3610
பாசுரம்
தூநீர் முகில்போல் தோன்றும்நின்
சுடர்க்கொள் வடிவும் கனிவாயும்,
தேநீர்க் கமலக் கண்களும்
வந்தென் சிந்தை நிறைந்தவா,
மாநீர் வெள்ளீ மலைதன்மேல்
வண்கார் நீல முகில்போல,
தூநீர்க் கடலுள் துயில்வானே.
எந்தாய். சொல்ல மாட்டேனே. 8.5.4
Summary
O Lord your coral lips and dew-fresh lotus eyes and radiant form have occupied my heart, I cannot say how, I see you reclining in the Milk Ocean like a dark rain-cloud on a snowcapped mountain pass