Responsive image

திருவாய்மொழி.741

பாசுர எண்: 3531

பாசுரம்
அங்கண் மலர்த்தண் டுழாய்முடி அச்சுத னே.அருளாய்,
திங்களும் ஞாயிறு மாய்ச்செழும் பல்சுட ராயிருளாய்,
பொங்கு பொழிமழை யாய்ப்புக ழாய்பழி யாய்ப்பின்னும்நீ,
வெங்கண்வெங் கூற்றமு மாவிவை யென்ன விசித்திரமே. 7.8.2

Summary

Beautiful Tulasi-wreathed Lord, Achyuta! Pray tell me! You are the Moon, The sun, the stars, darkness and thundering rain. Great fame, blame, and the sinister-eyed god of death are also. you: what wonders are these?

திருவாய்மொழி.742

பாசுர எண்: 3532

பாசுரம்
சித்திரத் தேர்வல வா.திருச் சக்கரத் தாய்.அருளாய்,
எத்தனை யோருக முமவை யாயவற் றுள்ளியுலும்,
ஒத்தவொண் பல்பொருள் களுலப் பில்லன வாய்வியவாய்,
வித்தகத் தாய்நிற்றி நீயவை யென்ன விடமங்களே. 7.8.3

Summary

Beautiful discus Lord Deft Charioteer! Pray speak; the many countless eyes, -and moving within them, the countless myriad objects, transient or not, -wondrously you stand as these, what mischief’s are these?

திருவாய்மொழி.743

பாசுர எண்: 3533

பாசுரம்
கள்ளவிழ் தாமரைக்கண்கண்ண னே.எனக் கொன்றருளாய்,
உள்ளது மில்லது மாயுலப் பில்லன வாய்வியவாய்,
வெள்ளத் தடங்கட லுள்விட நாகணை மேல்மருவி,
உள்ளப்பல் யோகுசெய் தியிவை யென்ன உபாயங்களே. 7.8.4

Summary

Honey-dripping-lotus-eyed-Lord! Pray give me an answer. You lie in the deep ocean on a hooded snake, and will these many things, being and non-being, permanent and impermanent, what designs are these?

திருவாய்மொழி.744

பாசுர எண்: 3534

பாசுரம்
பாசங்கள் நீக்கியென் னையுனக் கேயுறக் கொண்டிட்டு,நீ
வாச மலர்த்தண் டுழாய்முடி மாயவ னே.அருளாய்,
காயமும் சீவனு மாய்க்கழி வாய்ப்பிறப் பாய்ப்பின்னும்நீ,
மாயங்கள்செய்துவைத் தியிவை யென்ன மயக்குகளே. 7.8.5

Summary

Fragrant-Tulasi-blossom-Lord! Pray tell me. You rid me of my desires and took me as your own; body, breath, birth and death are you.  The many wondrous acts are yours, what deceptions are these?

திருவாய்மொழி.745

பாசுர எண்: 3535

பாசுரம்
மயக்கா. வாமன னே.மதி யாம்வண்ணம் ஒன்றருளாய்,
அயர்ப்பாய்த் தேற்றமு மாயழ லாய்க்குளி ராய்வியவாய்,
வியப்பாய் வென்றிகளாய்வினை யாய்ப்பய னாய்ப்பின்னும்நீ,
துயக்காய் நீநின்ற வாறிவை யென்ன துயரங்களே. 7.8.6

Summary

O Deceiving Manikin! Pray tell me, that I may understand ignorance and knowledge, heat and cold, wonders and trivia, victory and despair, use and wastefulness are you; what travails are these?

திருவாய்மொழி.746

பாசுர எண்: 3536

பாசுரம்
துயரங்கள் செய்யுங்கண்ணா.சுடர் நீண்முடி யாயருளாய்,
துயரம்செய் மானங்க ளாய்மத னாகி உகவைகளாய்,
துயரம்செய் காமங்க ளாய்த்துலையாய்நிலை யாய்நடையாய்,
துயரங்கள் செய்துவைத் தியிவை யென்னசுண் டாயங்களே. 7.8.7

Summary

O Hardships! My Krishna, Lord with a tall crown! Tell me, The afflicting pride, insolence and love, the afflicting desires, the heavy, the still, the moving, -you made these and caused me grief, -what games are these?

திருவாய்மொழி.747

பாசுர எண்: 3537

பாசுரம்
என்னச்சுண்டாயங்களால் நின்றிட்டாயென்னையாளும்கண்ணா,
இன்னதோர் தன்மையை என்றுன்னையாவர்க்கும் தேற்றரியை,
முன்னிய மூவுல குமவை யாயவற் றைப்படைத்து,
பின்னுமுள் ளாய்.புறத் தாய்.இவை யென்ன இயற்கைகளே. 7.8.8

Summary

O My Krishna ruling me!  What mischief you have filled with! You make it hard for anyone to see you and speak of you as this or that, Then you made the three worlds, and became them.  You are within me, and without. What ways are these?

திருவாய்மொழி.748

பாசுர எண்: 3538

பாசுரம்
என்ன இயற்கைகளால் எங்ஙனேநின்றிட் டாயென்கண்ணா,
துன்னு கரசர ணம்முத லாகவெல் லாவுறுப்பும்
உன்னு சுவையொளி யூறொலி நாற்றம் முற்றும்நீயே,
உன்னை யுணர வுறிலுலப் பில்லை நுணுக்கங்களே. 7.8.9

Summary

O My Krishna! you are the hands and feet and all the lirnbs, taste and form and touch; sound and smell too are you. Begin to think, there is no end to your subtle nature. What do these mean?  How do you stand?

திருவாய்மொழி.749

பாசுர எண்: 3539

பாசுரம்
இல்லை நுணுக்கங்க ளேயித னில்பிறி தென்னும்வண்ணம்
தொல்லைநன் னூலில் சொன்ன வுருவும் அருவும்நியே
அல்லித் துழாயலங் கலணி மார்ப.என் அச்சுதனே,
வல்லதோர் வண்ணம்சொன்னாலதுவேயுனக் காம்வண்ணமே. 7.8.10

Summary

You are the form and the formless spoken of in the Vedas, the subtle inseparable from the gross reality.  O My Achyuta with a Tulasi garland over your chest!  Whatever one attributes to you, that you are indeed!

திருவாய்மொழி.750

பாசுர எண்: 3540

பாசுரம்
ஆம்வண்ண மின்னதொன் றென்றறி வதரி யஅரியை,
ஆம்வண்ணத் தால்குரு கூர்ச்சட கோபன் அறிந்துரைத்த
ஆம்வண்ண வொண்டமிழ்களிவை யாயிரத் துளிப்பத்தும்,
ஆம்வண்ணத் தாலுரைப்பாரமைந் தார்தமக்கென்றைக்குமே. (2) 7.8.11

Summary

This decad of the thousand radiant songs by kurugur Satakopan on the Lord who cannot be described as this or that, -those who master it will  become devotees of Hari

Enter a number between 1 and 4000.