பெரிய திருவந்தாதி.67
அருளியவர்: நம்மாழ்வார்
பெரிய_திருவந்தாதி
பாசுர எண்: 2651
பாசுரம்
அதுவோநன் ரென்றங் கமருலகோ வேண்டில்,
அதுவோ பொருளில்லை யன்றே?, அதுவொழிந்து
மண்ணிறாள் வேனெனிலும் கூடும் மடநெஞ்சே,
கண்ணன் தாள் வாழ்த்துவதே கல்.
Summary
O Foolish Heart! If you desire the world of celestials thinking there lies the best, that is no exalted goal. Instead, if you remain on Earth and rule, that is good. Only learn to praise Krishna’s feet.
பெரிய திருவந்தாதி.68
அருளியவர்: நம்மாழ்வார்
பெரிய_திருவந்தாதி
பாசுர எண்: 2652
பாசுரம்
கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும்,
புல்லென் றழிந்தனகொல் ஏபாவம்,-வெல்ல
நெடியான் நிறங்கரியான் உள்புகுந்து நீங்கான்,
அடியேன துள்ளத் தகம்.
Summary
The supreme Lord of dark hue has entered my lowly heart, never to leave. Wonder if his mountain abode, ocean abode, sky abode, and Vaikunta abode have become desolate wastelands! What a pity!
பெரிய திருவந்தாதி.69
அருளியவர்: நம்மாழ்வார்
பெரிய_திருவந்தாதி
பாசுர எண்: 2653
பாசுரம்
அகம்சிவந்த கண்ணினராய் வல்வினைய ராவார்,
முகம்சிதைவ ராமன்றே முக்கி,-மிகுந்திருமால்
சீர்க்கடலை யுள்பொதிந்த சிந்தனையேன் றன்னை,
ஆர்க்கடலாம் செவ்வே யடர்த்து?
Summary
My terrible karmas have become red in their eyes and strained; they have lost their faces. The stronger Tirumal, -Ocean of goodness, -has entered my heart, Now who can oppress me?
பெரிய திருவந்தாதி.70
அருளியவர்: நம்மாழ்வார்
பெரிய_திருவந்தாதி
பாசுர எண்: 2654
பாசுரம்
அடர்ப்பொன் முடியானை யாயிரம்பே ரானை,
சுடர்கொள் சுடராழி யானை,-இடர்கடியும்
மாதா பிதுவாக வைத்தேன் எனதுளலே
யாதாகில் யாதே இனி?
Summary
The Lord with a golden crown, the Lord with a thousand names, the Lord who wields a radiant discus, is my mother and my father, I have him inside me; he ends my desparir. Now come what my, what can happen?
பெரிய திருவந்தாதி.71
அருளியவர்: நம்மாழ்வார்
பெரிய_திருவந்தாதி
பாசுர எண்: 2655
பாசுரம்
இனிநின்று நின்பெருமை யானுரைப்ப தென்னே,
தனிநின்ற சார்விலா மூர்த்தி,-பனிநீர்
அகத்துலவு செஞ்சடையான் ஆகத்தான், நான்கு
முகத்தான்நின் உந்தி முதல்.
Summary
Siva with Ganga in his mat-hair, occupies a corner in your person. Brahma seated on a lotus has his origin in you. O Lord with a frame that has neither a peer nor superior! What can I say to praise your glory?
பெரிய திருவந்தாதி.72
அருளியவர்: நம்மாழ்வார்
பெரிய_திருவந்தாதி
பாசுர எண்: 2656
பாசுரம்
முதலாம் திருவுருவம் மூன்றென்பர், ஒன்றே
முதலாகும் மூன்றுக்கும் மென்பர்-முதல்வா,
நிகரிலகு காருருவா. நின்னகத்த தன்றே,
புகரிலகு தாமரையின் பூ?
Summary
They say the Tri-murti is foremost of all. They say that the three originated from the one first-cause. O First-cause dark lord with Siva on your person! Does not the radiant lotus of Brahama too originate in you?
பெரிய திருவந்தாதி.73
அருளியவர்: நம்மாழ்வார்
பெரிய_திருவந்தாதி
பாசுர எண்: 2657
பாசுரம்
பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற,
காவி மலரென்றும் காண்தோறும், பாவியேன்
மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும், அவ்வவை
எல்லாம் பிரானுருவே என்று.
Summary
Whenever I see the Puvai flower, the Kaya flower, the blue lotus, and the red lotus, my frail lowly heart rejoices sayins, “Aho, these are all the Lord’s hues!”
பெரிய திருவந்தாதி.74
அருளியவர்: நம்மாழ்வார்
பெரிய_திருவந்தாதி
பாசுர எண்: 2658
பாசுரம்
என்றும் ஒருநாள் ஒழியாமை யானிரந்தால்,
ஒன்றும் இரங்கார் உருக்காட்டார்,-குன்று
குடையாக ஆகாத்த கோவலனார், நெஞ்சே.
புடைதான் பெரிதே புவி.
Summary
Everyday without fail, I offer worship but the cowherd Lord who lifted a mountain to protect the cows does not come, he has no pity. O Heart! does the Earth extend only on one side?
பெரிய திருவந்தாதி.75
அருளியவர்: நம்மாழ்வார்
பெரிய_திருவந்தாதி
பாசுர எண்: 2659
பாசுரம்
புவியும் இருவிசும்பும் நினகத்த, நீயென்
செவியின் வழிபுகுந்தென் னுள்ளாய்,-அவிவின்றி
யான்பெரியன் நீபெரியை என்பதனை யாரறிவார்,
ஊன்பருகு நேமியாய். உள்ளு.
Summary
O Lord wielding a discus that minces flesh! The Earth-world and the sky-world are within you. You have entered into me through my ears, quietly without my knowing. Am I bigger than you or are you bigger than me? Who knows this? Tell me.
பெரிய திருவந்தாதி.76
அருளியவர்: நம்மாழ்வார்
பெரிய_திருவந்தாதி
பாசுர எண்: 2660
பாசுரம்
உள்ளிலும் உள்ளந் தடிக்கும் வினைப்படலம்,
விள்ள விழித்துன்னை மெய்யுற்றால்,-உள்ள
உலகளவு யானும் உளனாவன் என்கொல்,
உலகளந்த மூர்த்தி. உரை.
Summary
Lord who measured the Earth! When I think of you and fall into a trance, my heart swells with you inside, my karmas disappear. When I wake up and see reality I become a part of the vast universe that you are! How is this ? Tell me