Responsive image

பெரிய திருவந்தாதி.57

பாசுர எண்: 2641

பாசுரம்
வழித்தங்கு வல்வினையை மாற்றானோ நெஞ்சே,
தழீஇக்கொண்டு போரவுணன் றன்னை,-சுழித்தெங்கும்
தாழ்விடங்கள் பற்றிப் புலால்வெள்ளம் தானுகள,
வாழ்வடங்க மார்விடந்த மால்?

Summary

O Heart! The Lord pressed the violent Asura Hiranya to his lap and fore apart his chest, making his blood and gore flow into pools of vortex everywhere.  Will he not also rid us of the terrible karmas that stand between us and him ?

பெரிய திருவந்தாதி.58

பாசுர எண்: 2642

பாசுரம்
மாலே. படிச்சோதி மாற்றேல், இனியுனது
பாலேபோல் சீரில் புழுத்தொழிந்தேன்,-மேலால்
பிறப்பின்மை பெற்றடிக்கீழ்க் குற்றேவ லன்று,
மறப்பின்மை யான்வேண்டும் மாடு.

Summary

Adorable Lord! Never again must you remove you radiant frame from my heart.  I have grown to love your glory flood, sweet as milk, I seek, -not the freedom from rebirth, continuous service at your feet, -but only that I may never forget you.

பெரிய திருவந்தாதி.59

பாசுர எண்: 2643

பாசுரம்
மாடே வரப்பெறுவ ராமென்றே, வல்வினையார்
காடானும் ஆதானும் கைகொள்ளார்,-ஊடேபோய்ப்
போரோதம் சிந்துதிரைக் கண்வளரும், பேராளன்
பேரோதச் சிந்திக்கப் பேர்ந்து.

Summary

The Lord reclines on a serpent in the middle of the ocean lapped by splashing waves,  Even as we think of him, out terrible karmas leave us, but they do not go away to the forest of elsewhere.  They remain close by, so that they can enter again.

பெரிய திருவந்தாதி.60

பாசுர எண்: 2644

பாசுரம்
பேர்ந்தொன்று நோக்காது பின்னிற்பாய் நில்லாப்பாய்
ஈன்துழாய் மாயனையே என்னெஞ்சே, பேர்ந்தெங்கும்
தொல்லைமா வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
இல்லைகாண் மற்றோர் இறை.

Summary

O Heart! Without shifting your attention to anything else, go on contemplating the sweet Tulasi garland Lord if you will, or leave, if you will not.  But know that there is no other god who can ensure your protection against the terrible miseries of hell.

பெரிய திருவந்தாதி.61

பாசுர எண்: 2645

பாசுரம்
இறைமுறையான் சேவடிமேல் மண்ணளந்த அந்நாள்,
மறைமுறையால் வானாடர் கூடி,-முறைமுறையின்
தாதிலகு பூத்தெளித்தால் ஒவ்வாதே, தாழ்விசும்பின்
மீதிலகித் தாங்கிடக்கும் மீன்.

Summary

When the Lord extended his foot into the sky, the stars below looked like myriads of pollen-dusted flowers strewn by the gods in hordes who dusted flowers strewn by the gods in hordes who came and offered worship with proper chants.

பெரிய திருவந்தாதி.62

பாசுர எண்: 2646

பாசுரம்
மீனென்னும் கம்பில் வெறியென்னும் வெள்ளிவேய்
வானென்னும் கேடிலா வான்குடைக்கு,-தானோர்
மணிக்காம்பு போல்நிமிர்ந்து மண்ணளந்தான், நங்கள்
பிணிக்காம் பெருமருந்து பின்.

Summary

The stars became the spokes, the planets became the frills, the sky became the umbrella, the Lord himself grew and became its stick.  When the manikin Lord measured the Earth.  He is also the medicine for all our sicknesses.

பெரிய திருவந்தாதி.63

பாசுர எண்: 2647

பாசுரம்
பின்துரக்கும் காற்றிழந்த சூல்கொண்டல் பேர்ந்தும் போய்,
வன்திரைக்கண் வந்தணைந்த வாய்மைத்தே, அன்று
திருச்செய்ய நேமியான் தீயரக்கி மூக்கும்,
பருச்செவியு மீர்ந்த பரன்.

Summary

The dark lightning cloud came rushing, like the bow-wielder lord who cut off the ears and nose of the terrible Rakshasi, then blown by an opposite wind receded, like the discus Lord retiring into his sea abode again.

பெரிய திருவந்தாதி.64

பாசுர எண்: 2648

பாசுரம்
பரனாம் அவனாதல் பாவிப்ப ராகில்,
உரனா லொருமூன்று போதும்,-மரமேழன்
றெய்தானைப் புள்ளின்வாய் கீண்டானையே,அமரர்
கைதான் தொழாவே கலந்து?

Summary

If the gods had realised the transcendent Lord in the Avataras of Rama when he pierced seven trees, and Krishna when he tore apart the beaks of the bird-Asura Baka, would they not have offered flowers worship with folded hands thrice a day?

பெரிய திருவந்தாதி.65

பாசுர எண்: 2649

பாசுரம்
கலந்து நலியும் கடுந்துயரை நெஞ்சே
மலங்க அடித்து மடிப்பான்,-விலங்கல்போல்
தொன்மாலைக் கேசவனை நாரணனை மாதவனை,
சொன்மாலை யெப்பொழுதும் சூட்டு.

Summary

O, The mountain-like adorable Lord Kesava, Narayana, Madava is ever ready to destroy the terrible Karmas that torment us, you, – O Heart!, -forever adore him with song garlands.

பெரிய திருவந்தாதி.66

பாசுர எண்: 2650

பாசுரம்
சூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை,
மாட்டே துயரிழைத்த மாயவனை,-ஈட்ட
வெறிகொண்ட தண்டுழாய் வேதியனை, நெஞ்சே.
அறிகண்டாய் சொன்னேன் அது.

Summary

O Heart! Learn who the Lord is, I will tell you.  He has a sharp discus, he is the wonder Lord who destroyed the terrible Rakshasa Ravana.  He is the substance of the Vedas.  He wears a cool Tulasi garland.

Enter a number between 1 and 4000.