Responsive image

திருவிருத்தம்.84

பாசுர எண்: 2561

பாசுரம்
தையல்நல் லார்கள் குழாங்கள் குழிய குழுவினுள்ளும்,
ஐயநல் லார்கள் குழிய விழவினும், அங்கங்கெல்லாம்
கையபொன் னாழிவெண் சங்கொடும் காண்பான் அவாவுவன்நான்
மையவண் ணா.மணியே,முத்த மே.என்றன் மாணிக்கமே.       84

Summary

O Dark Lord! My Gem! My pearl My Emerald! I long to see you, never mindifitbe in the midst of the milling crows of good ladies surrounding you, or in the festivals conducted by learned sees, or anywhere else.  With your golden discus and white conch!

திருவிருத்தம்.85

பாசுர எண்: 2562

பாசுரம்
மாணிக்கங் கொண்டு குரங்கெறி வொத்திரு ளோடுமுட்டி,
ஆணிப்பொன் னன்ன சுடர்படு மாலை, உலகளந்த
மாணிக்க மே.என் மரகத மே.மற்றொப் பாரையில்லா
ஆணிப்பொன் னே,அடி யேனுடை யாவி யடைக்கலமே.       85

Summary

O Gem Lord who measured the Earth!  My Emerald! O Nugget of gold, lord without a peer!  Like a monkey picking up a gem and throwing it away, the evening sky has thrown away the golden Sun into darkness.  You are the sole refuge for my lowly soul!

திருவிருத்தம்.86

பாசுர எண்: 2563

பாசுரம்
அடைக்கலத் தோங்கு கமலத் தலரயன் சென்னியென்னும்,
முடைக்கலத் தூண்முன் அரனுக்கு நீக்கியை, ஆழிசங்கம்
படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கன் றாய்ச்சிவன் தாம்புகளால்
புடைக்கலந் தானை,எம் மானையென் சொல்லிப் புலம்புவனே?       86

Summary

Even Siva and Brahma offer flowers and worship, but can never praise the lord’s glories fully, He is Madana’s father. He is my heart, can there be a better fortune than this?

திருவிருத்தம்.87

பாசுர எண்: 2564

பாசுரம்
புலம்பும் கனகுரல் போழ்வாய அன்றிலும், பூங்கழிபாய்ந்
தலம்பும் கனகுரல் சூழ்திரை யாழியும், ஆங்கவைநின்
வலம்புள் ளதுநலம் பாடு மிதுகுற்ற மாகவையம்
சிலம்பும் படிசெய்வ தே,திரு மால்இத் திருவினையே?       87

Summary

O Lord Tirumal! This Tiru-like girl is abused by all for singing the glories of your strong Garuda bird, in the midst of the hoarse double-beaked Anril bird’s mating call, and the roar of the surrounding sea flowing into shallow salt pans, Is it proper for you to bring her to this state?

திருவிருத்தம்.88

பாசுர எண்: 2565

பாசுரம்
திருமால் உருவொக்கும் மேரு,அம் மேருவில் செஞ்சுடரோன்
திருமால் திருக்கைத் திருச்சக் கரமொக்கும், அன்னகண்டும்
திருமால் உருவோ டவஞ்சின்ன மேபிதற் றாநிற்பதோர்
திருமால் தலைக்கொண்ட நங்கட்கு, எங் கேவரும் தீவினையே?       88

Summary

The Meru mount resembles the Lord Tirumal’s frame.  The Sun rising over the mount resembles the beautiful radiant discus in the Lord’s hand. Seeing similar things, we praise the Lord and his symbols alike, with a heart overflowing with love.  How can evil ever come upon us?

திருவிருத்தம்.89

பாசுர எண்: 2566

பாசுரம்
தீவினை கட்கரு நஞ்சினை நல்வினைக் கின்னமுதை,
பூவினை மேவிய தேவி மணாளனை, புன்மையெள்காது
ஆவினை மேய்க்கும்வல் லாயனை அன்றுல கீரடியால்
தாவின ஏற்றையெம் மானைஎஞ் ஞான்று தலைப்பெய்வனே?       89

Summary

The Lord is the antidote for the venom of evil karmas and manna for good deeds.  He is the bridegroom of the goddess on the lotus, Without belitting himself, he grazed  cows and protected them.  Then in the yore he strode the Earth in two steps.  Alas, when will we attain him?

திருவிருத்தம்.90

பாசுர எண்: 2567

பாசுரம்
தலைப்பெய்து யானுன் திருவடி சூடுந் தகைமையினால்,
நீலைபெய்த ஆக்கைக்கு நோற்றவிம் மாயமும், மாயம்செவ்வே
நிலைப்பெய் திலாத நிலைமையுங் காண்டோ றசுரர்குழாம்
தொலைப்பெய்த நேமியெந் தாய்,தொல்லை யூழி சுருங்கலதே.       90

Summary

O Lord bearing a discus that wipes out Asuras! By the grace of worshipping your feet with my head, my heart is set in you. Considering by the wonder of my receiving such as conductive body and the wonder of my receiving the fruits of my bodily endeavours, the long aeons of waiting gone by seem trivial.

திருவிருத்தம்.91

பாசுர எண்: 2568

பாசுரம்
சுருங்குறி வெண்ணை தொடுவுண்ட கள்வனை, வையமுற்றும்
ஒருங்குர வுண்ட பெருவயிற் றாளனை, மாவலிமாட்டு
இருங்குறள் ஆகி இசையவோர் மூவடி வேண்டிச்சென்ற
பெருங்கிறி யானையல் லால்,அடி யேன்நெஞ்சம் பேணலதே.       91

Summary

The Lord who came and stole butter from the rope-shelf, who swallowed the whole universe in one gulp, and who went to Mabali as on adorable manikin and tricked him, alone is my heart’s desire. I shall not serve anyone else.

திருவிருத்தம்.92

பாசுர எண்: 2569

பாசுரம்
பேணல மில்லா அரக்கர்முந் நீர பெரும்பதிவாய்,
நீணகர் நீளெரி வைத்தரு ளாயென்று, நீன்னைவிண்ணோர்
தாணிலந் தோய்ந்து தொழுவர்நின் மூர்த்திபல் கூற்றிலொன்று
காணலு மாங்கொலன் றே,வைகல் மாலையுங் காலையுமே.       92

Summary

The celestials prayed that you raze the city of Lanka island of the merciless Rakshasa, which you did by setting your foot on Earth in mortal form.  But do they every worship you night and day, that they may be blest to see even a part of your many-splendoured beautiful frame?

திருவிருத்தம்.93

பாசுர எண்: 2570

பாசுரம்
காலைவெய் யோற்குமுன் னோட்டுக் கொடுத்தகங் குற்குறும்பர்
மாலைவெய் யோன்பட வையகம் பாவுவர், அன்னகண்டும்
காலைநன் ஞானத் துறைபடிந் தாடிக்கண் போது,செய்து
மாலைநன் னாவில்கொள் ளார்,நினை யாரவன் மைப்படியே.       93

Summary

The wicked ones of darkness that flee in the morning before the Sun rises return in the evening when the sun sets, and crows the Earth everyday.  Even seeing this, no one turns his thoughts to the dark-hued lord, no one bathes in the wisdom-tank every morning, no one wakes up inwardly and offers praise to the lord Tirumal Alas!

Enter a number between 1 and 4000.