Responsive image

திருவிருத்தம்.74

பாசுர எண்: 2551

பாசுரம்
தளர்ந்தும் முறிந்தும் வருதிரைப் பாயல், திருநெடுங்கண்
வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும், மால்வரையைக்
கிளர்ந்தும் அறிதரக் கீண்டெடுத் தான்முடி சூடுதுழாய்
அளைந்துண் சிறுபசுந் தென்றல்,அந் தோவந் துலாகின்றதே.       74

Summary

On a bed in the sea, withwaves that rise and recede, the lord withSri goes to sleep, then wakes up, swallows the Universe, then holds a hill upside down to save his cows. A soft tender breeze carries a little of the fragrance from his Tulasi wreath and wanders here, what a wonder!

திருவிருத்தம்.75

பாசுர எண்: 2552

பாசுரம்
உலாகின்ற கெண்டை ஒளியம்பு,எம்ஆவியை ஊடுருவக்
குலாகின்ற வெஞ்சிலை வாண்முகத் தீர்,குனி சங்கிடறிப்
புலாகின்ற வேலைப் புணரியம் பள்ளியம் மானடியார்
நிலாகின்ற வைகுந்த மோ,வைய மோம் நிலையிடமே?       75

Summary

O Bright-faced Ladies with fish-like dart-sharp eyes, shot with bow-like eyebrows to pierce through our souls! Is your place of permanent residence the Vaikunta that devotees of the ocean-reclining lord prefer, or is it the Earth?

திருவிருத்தம்.76

பாசுர எண்: 2553

பாசுரம்
இடம்போய் விரிந்திவ் வுலகளந் தானெழி லார்தண்டுழாய்,
வடம்போ தினையும் மடநெஞ்ச மே,நங்கள் வெள்வளைக்கே
விடம்போல் விரித லிதுவியப் பேவியன் தாமரையின்
தடம்போ தொடுங்க,மெல் லாம்பல் அலர்விக்கும் வெண்திங்களே.       76

Summary

O Foolish Heart of mine, desiring the Tulasi-garland of the lord who rose and measured the Earth! While the big petals of the red lotus close. The little pearls of the white lily open up by the Moon which spreads its moonlight poison everywhere, to take our white bangles, Is this is surprising?

திருவிருத்தம்.77

பாசுர எண்: 2554

பாசுரம்
திங்களம் பிள்ளை புலம்பத்தன் செங்கோ லரசுபட்ட
செங்களம் பற்றிநின் றெள்குபுன் மாலை,தென் பாலிலங்கை
வெங்களம் செய்தனம் விண்ணோர் பிரானார் துழாய்துணையா
நங்களை மாமைகொள் வான்,வந்துதோன்றி நலிகின்றதே.       77

Summary

The twilight wife bemoans the death of her husband the noble king sun in the bloody-red battlefied of the West, while the child Moon wails without consolation.  The Lord who devastated the Southern Lanka city, Rama, the Lord of celestials, comes to destroy our well being with his Tulasi-garland ally, alas!

திருவிருத்தம்.78

பாசுர எண்: 2555

பாசுரம்
நலியும் நரகனை வீட்டிற்றும், வாணன்திண் டோ ள்துணித்த
வலியும் பெருமையும் யாஞ்சொல்லும் நீர்த்தல்ல, மைவரைபோல்
பொலியும் உருவில் பிரானார் புனைபூந் துழாய்மலர்க்கே
மெலியும் மடநெஞ்சி நார்,தந்து போயின வேதனையே.       78

Summary

Even Krishna the dark radiant mountain-like lord, does not have the compassion we seek, though he destroyed Narakasura, cut off the thousand strong arms of Banasura and had the strength to overcome all his detractors. My foolish heart left me seeking the lord’s blossoming Tulasi garland. Alas, misery is all that I got in the process.

திருவிருத்தம்.79

பாசுர எண்: 2556

பாசுரம்
வேதனை வெண்புரி _லனை, விண்ணோர் பரவநின்ற
நாதனை ஞாலம் விழுங்கும் அநாதனை, ஞாலம்தத்தும்
பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல்பள்ளி கொண்டருளும்
சீதனை யேதொழு வார்,விண்ணு ளாரிலும் சேரியரே.       79

Summary

The Lord of the Vedas, the Lord wearing a white thread, the lord worshipped by celestials, the Lord of all, the lordless one who swallows the Universe, the lord who straddled the earth, the lord reclining on a cool serpent bed in the deep Ocean of Milk, -those who worship hum thus are superior even to the gods.

திருவிருத்தம்.80

பாசுர எண்: 2557

பாசுரம்
சீரர சாண்டுதன் செங்கோல் சிலநள் செலீஇக்கழிந்த,
பாரர சொத்து மறைந்தது நாயிறு, பாரளந்த
பேரர சே.எம் விசும்பர சே.எம்மை நீத்துவஞ்சித்த
ஓரர சே.அரு ளாய்,இருளாய்வந் துறுகின்றதே.       80

Summary

Extending the sceptre of his just rule for a few days, -like the countless kings of the Earth, -the Sun has disappeared. O, Mighty king who measured the Earth, O king of the celestials! O, king of the domain of despair through separation! Grace us! A terrible palll surrounds us.

திருவிருத்தம்.81

பாசுர எண்: 2558

பாசுரம்
உருகின்ற கன்மங்கள் மேலான ஓர்ப்பில ராய்,இவளைப்
பெருகின்ற தாயர்மெய்ந் நொந்து பெறார்கொல் துழாய்குழல்வாய்த்
துறுகின் றிலர்தொல்லை வேங்கட மாட்டவும் சூழ்கின்றிலர்
இருகின்ற தாலிவ ளாகம்,மெல் லாவி எரிகொள்ளவே.       81

Summary

It would apepar that these ladies who surround her, not inquiring of the best ways to retrieve her, never really begot her the hard way. They do not swathe her coiffure with the Lord’s Tulasi, nor go circum-ambulating the Venkatam hill.  Alas, a burning love sickness is consuming her soul!

திருவிருத்தம்.82

பாசுர எண்: 2559

பாசுரம்
எரிகொள்செந் நாயி றிரண்டுட னேயுத யம்மலைவாய்,
விரிகின்ற வண்ணத்த எம்பெருமான்கண்கள், மீண்டவற்றுள்
எரிகொள்செந் தீவீழ் அசுரரைப் போலஎம் போலியர்க்கும்
விரிவசொல் லீரிது வோ,வைய முற்றும் விளரியதே?       82

Summary

Like two radiant Suns risen at once over the Udayagirl hill, the Lord’s eyes have begun to shine again, with a fire in them that burns me along with the Asuras that fall into if.  Tell me, O Sakhis! Is this what the good world desires?

திருவிருத்தம்.83

பாசுர எண்: 2560

பாசுரம்
விளரிக் குரலன்றில் மென்படை மேகின்ற முன்றில்பெண்ணை,
முளரிக் குரம்பை யிதுவிது வாக, முகில்வண்ணன்பேர்
கிளரிக் கிளரிப் பிதற்றும்மெல் லாவியும் நைவுமெல்லாம்
தளரில் கொலோவறி யேன், உய்யலாவதித் தையலுக்கே.       83

Summary

Hearing the repeated curlew-sound of the Anril bird mingling with its tender mate in the thorny nest on a Palm tree in the yard, this girl too repeats the cloud-hued Lord’s names firelessly, ruining her health and well being.  Is it only after she breaks down completely that she will find her salvation?  I do not know.

Enter a number between 1 and 4000.