திருவிருத்தம்.54
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2531
பாசுரம்
வீசும் சிறகால் பறத்திர், விண்ணாடு_ங் கட்கெளிது
பேசும் படியன்ன பேசியும் போவது, நெய்தொடுவுண்
டேசும் படியன்ன செய்யுமெம் மீசர்விண் ணோர்பிரானார்
மாசின் மலரடிக் கீழ்,எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே 54
Summary
O Bumble bees that unite me to the soles of my perfect lord. The lord of gods who was abused for stealing butter! You have wings that can take you to Vaikunta easily. Before you go, left me what you intend to say to him about me.
திருவிருத்தம்.55
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2532
பாசுரம்
வண்டுக ளோ.வம்மின் நீர்ப்பூ நிலப்பூ மரத்திலொண்பூ,
உண்டுகளித்துழல் வீர்க்கொன்றுரைக்கியம், ஏனமொன்றாய்
மண்துக ளாடிவை குந்தமன்னாள்குழல் வாய்விரைபோல்
விண்டுகள் வாரும், மலருள வோம் வியலிடத்தே? 55
Summary
O Bumble bees! You have tasted the nectar of water-borne flowers, Earth-borne flowers and sky-borne flowers of trees. We have something to ask you. The lord came as a boar and bathed in the dust of the Earth. Sweet as his Vaikunta is this dame, whose coiffure bears flowers that spill fragrant nectar. Have you seen such excellence anywhere else?
திருவிருத்தம்.56
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2533
பாசுரம்
வியலிட முண்ட பிரானா விடுத்த திருவருளால்,
உயலிடம் பெற்றுய்ந்தம் அஞ்சலம் தோழி,ஓர் தண்தென்றல்வந்
தயலிடை யாரும் அறிந்திலர் அம்பூந் துழாயினின்தேன்
புயலுடை நீர்மையி னால், தடவிற்றென் புலன்கலனே. 56
Summary
Sister! Have no fear. By the grace of the lord who swallowed the Earth, we have found a refuge and redemption. A cool breeze with the heavenly touch of clouds and laden with the nectar of Tulasi caressed my limbs and my sense, Nobody else knew about this.
திருவிருத்தம்.57
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2534
பாசுரம்
புலக்குண் டலப்புண்ட ரீகத்த போர்க்கொண்டை, வல்லியொன்றால்
விலக்குண் டுலாகின்று வேல்விழிக் கின்றன, கண்ணன் கையால்
மலக்குண் டமுதம் சுரந்த மறிகடல் போன்றவற்றால்
கலக்குண்ட நான்றுகண் டார்,எம்மை யாரும் கழறலரே. 57
திருவிருத்தம்.58
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2535
பாசுரம்
கழல்தலம் ஒன்றே நிலமுழு தாயிற்று, ஒருகழல்போய்
நிழல்தர எல்லா விசும்பும் நிறைந்தது, நீண்ட அண்டத்து
உழறலர் ஞானச் சுடர்விளக் காயுயர்ந் தோரையில்லா
அழறலர் தாமரைக் கண்ணன், என்னோவிங் களக்கின்றதே? 58
Summary
His one sole covered the Earth. His one foot raised into the sky shadowed the worlds below and filled the space. A light of knowledge-bliss spread everywhere in the Universe. The beautiful-as-the-swamp-lotus Krishna is one without a superior, wonder what he has in store for us here!
திருவிருத்தம்.59
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2536
பாசுரம்
அளப்பருந் தன்மைய ஊழியங் கங்குல்,அந் தண்ணந்துழாய்க்கு
உளப்பெருங் காதலில் நீளிய வாயுள, ஓங்குமுந்நீர்
வளப்பெரு நாடன் மதுசூ தனனென்னும் வல்வினையேன்
தளப்பெரு நீண்முறு வல்,செய்யவாய தடமுலையே. 59
Summary
Alas, the sinner that I am! My daughter with a soft winsome smile, coral Hps and broad breasts, laments. “This long as on aeon night, impossible to measure, stretches infinitely by my craving for the cool Tulasi of the lord Madhusudana. but alas! he is the rule of the Ocean-girdled Earth”.
திருவிருத்தம்.60
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2537
பாசுரம்
முலையோ முழுமுற்றும் போந்தில, மொய்பூங் குழல்குறிய
கலையோ அரையில்லை நாவோகுழறும், கடல்மண்ணெல்லாம்
விலையோ எனமிளி ருங்கண் ணிவள்பர மே.பெருமான்
மலையோ திருவேங் கடமென்று கற்கின்றா வாசகமே? (2) 60
Summary
Her breasts have not grown to the full, her soft hair does not gather into a tuft, her dress does not stay on her person, her tongue speaks in bladder. Yet her lips shine with a brightness that not the Earth or ocean can buy. She is always recliting the words, “The lod’s hill is Tiruvenkatam”
திருவிருத்தம்.61
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2538
பாசுரம்
வாசகம் செய்வது நம்பரமே?, தொல்லை வானவர்தம்
நாயகன் நாயக ரெல்லாம் தொழுமவன், ஞாலமுற்றும்
வேயக மாயினும் சோரா வகையிரண் டேயடியால்
தாயவன், ஆய்க்குல மாய்வந்து தோன்றிற்று நம்மிறையே. 61
Summary
The lord celestials, worshipped by the gods, measured the Earth in two strides without losing a blade of grass. He is our lord, who came as a cowherd lad. Is there anything we can say about him unequivocally?
திருவிருத்தம்.62
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2539
பாசுரம்
இறையோ இரக்கினும் ஈங்கோர்பெண்டால்,என வும்மிரங்காது,
அறையோ. எனநின் றதிரும் கருங்கடல், ஈங்க்கிவள்தன்
நிறையோ இனியுன் திருவருளாலன்றிக் காப்பரிதால்
முறையோ, அரவணை மேல்பள்ளி கொண்ட முகில்வண்ணனே. 62
Summary
The dark ocean does not relent even if we plead mercy, nor pity her for being a helpless female, and continues to shout victory, alas! O Lord who reclines here on a serpent! Is this proper? Alas, no more can she save her charm except through your grace.
திருவிருத்தம்.63
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2540
பாசுரம்
வண்ணம் சிவந்துள வானாடமரும் குளிர்விழிய,
தண்மென் கமலத் தடம்போல் பொலிந்தன, தாமிவையோ
கண்ணன் திருமால் திருமுகந் தன்னொடும் காதல்செய்தேற்
கெண்ணம் புகுந்து,அடி யேனொடிக் கால மிருகின்றதே. 63
Summary
Aho! The cool heavenly gaze of these red-lotus-like eyes spreads a radiance everywhere in my love-filled heart. The lord Kirshna, Tirumal, appears with such a face before me, this time to stay on forever.