திருவிருத்தம்.34
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2511
பாசுரம்
சிதைக்கின்ற தாழியென் றாழியைச் சீறி,தன் சீறடியால்
உதைக்கின்ற நாயகந் தன்னொடும் மாலே, உனதுதண்தார்
ததைக்கின்ற தண்ணந் துழாயணி வானது வேமனமாய்ப்
பதைக்கின்ற மாதின் திறத்துஅறியேஞ்செயற் பாலதுவே. 34
Summary
O Adorable Lord! This girl draws circles in the sand with her toe and counts, then seeing the omens read ill, she angrily erases them with her foot. Her heart is always set on wearing your cool Tulasi garland, she raves, I do not know what I can do for this girl.
திருவிருத்தம்.35
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2512
பாசுரம்
பால்வாய்ப் பிறைப்பிள்ளை ஒக்கலைக் கொண்டு, பகலிழந்த
மேல்பால் திசைப்பெண் புலம்புறு மாலை, உலகளந்த
மால்பால் துழாய்க்கு மனமுடை யார்க்குநல் கிற்றையெல்லாம்
சோல்வான் புகுந்து,இது வோர்பனி வாடை துழாகின்றதே. 35
Summary
The Plunderer evening has killed the valiant day, whose young wife west stands wailing with the milk-dribbling child Moon on her waist. His vassal the cool breeze goes on a rampage, taking all that is left of those who desire the Tulasi-garland of the Earth-measuring lord!
திருவிருத்தம்.36
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2513
பாசுரம்
துழாநெடுஞ் சூழிரு ளென்று,தன் தண்தா ரதுபெயரா
எழாநெடு வூழி யெழுந்தவிக் காலத்தும், ஈங்கிவளோ
வழாநெடுந் துன்பத்த ளென்றிரங் காரம்ம னோ.இலங்கைக்
குழாநெடு மாடம், இடித்த பிரானார் கொடுமைகளே . 36
Summary
The lord who destroyed the fortressed Lanka does not give his coal-Tulasi garland, This night of darkness stretches into eternity. His heart does not move to pity saying, “Oh, this girl is suffering this is no place for her to be”, Alas, the terrible ways!
திருவிருத்தம்.37
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2514
பாசுரம்
கொடுங்கால் சிலையர் நிரைகோ ளுழவர், கொலையில்வெய்ய
கடுங்கால் இளைஞர் துடிபடும் கவ்வைத்து, அருவினையேன்
நெடுங்கால மும்கண்ணன் நீண்மலர்ப் பாதம் பரவிப் பெற்ற
தொடுங்கா லொசியு மிடை, இள மாஞ்சென்ற சூழ்கடமே. 37
Summary
Oh, the sinner that I am My fragile fawn-like daughter who has for long been worshipping Krishna’s feet has gone. The desert that surrounds us is filled with terrible bow-wielding hunters. Cattle stealers, murderers and youthful swift runners whose drums bear all night.
திருவிருத்தம்.38
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2515
பாசுரம்
கடமா யினகள் கழித்து,தம் கால்வன்மை யால்பலநாள்
தடமா யினபுக்கு நீர்நிலை நின்ற தவமிதுகொல்,
குடமாடி யிம்மண்ணும் விண்ணும் குலுங்க வுலகளந்து
நடமா டியபெரு மான்,உரு வொத்தன நீலங்களே. 38
Summary
O Dark blue water lilies! You have the hue of the pot-dancer-lord who measured the Earth and sky with thunderous feet is this the fruit of your penance? –you have renounced your garden home and remain standing firmly on one leg in the deep waters all the time.
திருவிருத்தம்.39
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2516
பாசுரம்
நீலத் தடவரை மேல்புண்ட ரீக நெடுந்தடங்கள்
போல, பொலிந்தெமக் கெல்லா விடத்தவும், பொங்குமுந்நீர்
ஞாலப் பிரான்விசும் புக்கும் பிரான்மற்றும் நல்லோர்பிரான்
கோலம் கரிய பிரான்,எம்பிரான்கண்ணின் கோலங்களே. 39
Summary
My Lord is the dark-hued lord, the lord of the ocean-girdled Earth, the lord of the sky and the lord of all the good folk. His beautiful eyes resemble a thicket of lotuses in a gem pool on a dark mountain. They appear before me everywhere.
திருவிருத்தம்.40
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2517
பாசுரம்
கோலப் பகற்களி றொன்றுகற் புய்ய, குழாம்விரிந்த
நீலக்கங் குற்களி றெல்லாம் நிறைந்தன, நேரிழையீர் .
ஞாலப்பொன் மாதின் மணாளன் துழாய்நங்கள் சூழ்குழற்கே
ஏலப் புனைந்தென்னை மார்,எம்மை நோக்குவ தென்றுகொலோ. 40
Summary
Ladies! The gold caparisoned male elephant the sun, just went over the western hills, and a horde of dark elephants, the night came to surround him everywhere. Will we get to wear in our curly locks the cool Tulasi garland from the idegroom lord of Sri and Bhu? Oh, when will our mothers see us thus? Alas!
திருவிருத்தம்.41
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2518
பாசுரம்
என்றும்புன் வாடை யிதுகண்டறிதும்,இவ் வாறுவெம்மை
ஒன்றுமுருவும் சுவடும் தெரியிலம், ஓங்கசுரர்
பொன்றும் வகைபுள்ளை யூர்வான் அருளரு ளாதவிந்நாள்
மன்றில் நிறைபழி தூற்றி, நின்றென்னைவன் காற்றடுமே. 41
திருவிருத்தம்.42
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2519
பாசுரம்
வன்காற் றறைய ஒருங்கே மறிந்து கிடந்தலர்ந்த,
மென்காற் கமலத் தடம்போற் பொலிந்தன, மண்ணும்விண்ணும்
என்காற் களவின்மை காண்மினென் பானொத்து வான்நிமிர்ந்த
தன்கால்பணிந்தவென் பால்,எம்பிரான தடங்கண்களே. 42
Summary
When the lord grew into the sky, his eyes glanced side wards as if saying, “See, these worlds are not enough for my feet” The wind blowing over me now shows a lake full lotuses, all learning to one side.
திருவிருத்தம்.43
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2520
பாசுரம்
கண்ணும்செந் தாமரை கையு மவைஅடி யோஅவையே,
வண்ணம் கரியதோர் மால்வரை போன்று, மதிவிகற்பால்
விண்ணும் கடந்தும்பர் அப்பால்மிக் குமற்றெப் பால்எவர்க்கும்
எண்ணு மிடத்தது வோ, எம்பிரான தெழில்நிறமே? 43
Summary
My Lord’s eyes are like lotuses. His hands are the same, his feet too are the same! His dark radiance is the hue of a huge mountain that rises over the skies, boggling the mind, over the world of celestials, beyond the comprehension of anyone, Oh!