திருவிருத்தம்.24
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2501
பாசுரம்
இயல்வா யினவஞ்ச நோய்கொண் டுலாவும், ஓரோகுடங்கைக்
கயல்பாய் வனபெரு நீர்க்கண்கள் தம்மொடும், குன்றமொன்றால்
புயல்வா யினநிரை காத்தபுள் ளூர்திகள் ளூரும்துழாய்க்
கொயல்வாய் மலர்மேல், மனத்தொடென் னாங்கொலெம் கோல்வளைக்கே? 24
Summary
My bangled daughter has fallen prey to a deadly disease. She doles out fears by the handful, from fish-like eyes that would fill her palms. Alas! What is going to happen to her, and to her heart which craves for the nectar-laden flowers of the Tulasi wreath worn by the bird-rider Lord who protected his cows against a rain with a mount?
திருவிருத்தம்.25
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2502
பாசுரம்
எங்கோல் வளைமுத லா,கண்ணன் மண்ணும்விண் ணும்அளிக்கும்
செங்கோல் வளைவு விளைவிக்கும் மால்,திறல் சேரமர்
தங்கோ னுடையதங் கோனும்ப ரெல்லா யவர்க்கும்தங்கோன்
நங்கோ னுகக்கும் துழாய்,எஞ்செய் யாதினி நானிலத்தே ? 25
Summary
Because of my bangled daughter, this Tulasi, -that the Lord of gods, the lord of celestials, the lord of all, our own lord revels in, -has become a blemish on the just rule of Krishna over the sky and Earth. Alas! Now what more may happen in the four-parted world?
திருவிருத்தம்.26
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2503
பாசுரம்
நானிலம் வாய்க்கொண்டு நன்னீ ரறமென்று கோதுகொண்ட,
வேனிலஞ் செல்வன் சுவைத்துமிழ் பாலை, கடந்தபொன்னே.
கால்நிலந் தோய்ந்துவிண் ணோர்தொழும் கண்ணன்வெஃ காவுதுஅம்பூந்
தேனிளஞ் சோலையப் பாலது, எப் பாலைக்கும் சேமத்ததே. 26
Summary
The hot-tempered Sun eats up the four-parted Earth, Sucks in the juice and spits out the dry desert, O Precious girl who has just crossed that region! Celestials come down to Earth and worship the lord Krishna in Vehka, which is close at hand, Just beyond it is the fragrant nectar-grove-surrounded Tiruttankal. If gives relief to one in any condition, So hold on!
திருவிருத்தம்.27
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2504
பாசுரம்
சேமம்செங் கோனரு ளே,செருவாரும்நட் பாகுவரென்
றேமம் பெறவையம் சொல்லும்மெய்யே,பண்டெல் லாம்மறைகூய்
யமங்க டோ றெரி வீசும்நங் கண்ணனந் தண்ணந்துழாய்த்
தாமம் புனைய,அவ் வாடையீ தோவந்து தண்ணென்றதே. 27
Summary
Happily, the popular saying that even enemies become friends when a person is in the king’s favour has come true!! The breeze that hitherto had been breathing fire over me age after age, has now become cool and pleasant, after receiving the Tualsi garland of the lord.
திருவிருத்தம்.28
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2505
பாசுரம்
தண்ணந் துழாய்வளை கொள்வது யாமிழப் போம், நடுவே
வண்ணம் துழாவியோர் வாடை யுலாவும்,வள் வாயலகால்
புள்நந் துழாமே பொருநீர்த் திருவரங் கா.அருளாய்
எண்ணந் துழாவு மிடத்து,உள வோபண்டும் இன்னன்னவே? 28
Summary
O Lord of Tiruvarangam where waves of the kaveri ensure that sharp-beaked birds do not peck into snails! While I lose my bangles for the Tulasi wreath, is it proper for a cool breeze to blow through me and drain my colour? Has it ever happeened like this before? Tell me!
திருவிருத்தம்.29
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2506
பாசுரம்
இன்னன்ன தூதெம்மை ஆளற்றப் பட்டிரந் தாளிவளென்று
அன்னன்ன சொல்லாப் பெடையொடும் போய்வரும், நீலமுண்ட
மின்னன்ன மேனிப் பெருமா னுலகில்பெண் தூதுசெல்லா
அன்னன்ன நீர்மைகொ லோ, குடிச்சீர்மையி லன்னங்களே . 29
Summary
Knowing that I spoke out thus and thus, only because I was alone without help. Well-bred swan-pairs would sift out the good from the bad and take my sweet words alone as message to my lord. O lit-bred swans! Have there ever been swans refusing to take maiden’s messages in the blessed world of the cloud-and-lightning hued lord?
திருவிருத்தம்.30
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2507
பாசுரம்
அன்னம்செல் வீரும்வண் டானம்செல்வீரும் தொழுதிரந்தேன்
முன்னம்செல் வீர்கள் மறவேல்மினோகண்ணன் வைகுந்தனோ
டென்னெஞ்சி னாரைக்கண் டாலென்னைச் சொல்லி அவரிடைநீர்
இன்னஞ்செல் லீரோ, இதுவோ தகவென் றிசைமின்களே . 30
Summary
O Swans preparing for flight! O Herons preparing for flight! I beg and plead of you. Whoever goes there first, do not forget, If you see my heart with the Valikunta lord Krishna, tell him, -my heart, -about me, impress upon him and ask, “Do you still not go back? Is this proper?”.
திருவிருத்தம்.31
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2508
பாசுரம்
இசைமின்கள் தூதென் றிசைத்தா லிசையிலம், என்தலைமேல்
அசைமின்க ளென்றா லசையிங்கொலாம்,அம்பொன் மாமணிகள்
திசைமின் மிளிரும் திருவேங்கடத்துவன் தாள்சிமயம்
மிசைமின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே . 31
Summary
The dark lightning cloud prepares to leave for Venkatam to rain gold and gems everywhere over the strong peaks. When I entreat them to take a message for me, they refuse, will they of least move over my head? Ah, yes!
திருவிருத்தம்.32
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2509
பாசுரம்
மேகங்க ளோ.உரை யீர், திருமால்திரு மேனியொக்கும்
யோகங்க ளுங்களுக் கெவ்வாறு பெற்றீர், உயிரளிப்பான்
மாகங்க ளெல்லாம் திரிந்துநன்னீர்கள் சுமந்து_ந்தம்
ஆகங்கள் நோவ, வருந்தும் தவமாம் அருள்பெற்றதே? 32
Summary
O Clouds! Tell, me how did you acquire the lord Tirumal’s dark hue! I know, carrying life-sustaining water, you roam the skies, hurting your bodies sorely, That penance earned you his grace!
திருவிருத்தம்.33
அருளியவர்: நம்மாழ்வார்
திருவிருத்தம்
பாசுர எண்: 2510
பாசுரம்
அருளார் திருச்சக் கரத்தால் அகல்விசும் பும்நிலனும்
இருளார் வினைகெடச் செங்கோல் நடாவுதிர், ஈங்கோர்பெண்பால்
பொருளோ எனுமிகழ் வோ?இவற்றின்புறத் தாளென்றெண்ணோ?
தெருளோம் அரவணை யீர்,இவள் மாமை சிதைக்கின்றதே. 33
Summary
O Lord reclining on a serpent! With your benevolent discus, you reign over the wide Earth and sky, destroying the darkness of karmas, This girl wanes day by day. Is it because your consider women to be of no consequence in your reign? Or is it because you consider this girl outside the pale of justice? We do not know.