​திருப்பல்லாண்டு - 6

அருளியவர் : பெரியாழ்வார்

பாசுர எண்: 6

எந்தைதந் தைதந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி*

வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு வோணத் திருவிழவில்*

அந்தியம் போதில் அரியுரு வாகி அரியை யழித்தவனைப்* பந்தனை

தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதுமே.

(திருப்பல்லாண்டு - 6)

எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி*

வந்து வழி வழி ஆட்செய்கின்றோம் திருவோணத் திருவிழவில்*

அந்தியம் போதில் அரி உருவாகி அரியை அழித்தவனைப்*

பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே

(திருப்பல்லாண்டு - 6)

endhai thandhai thandhai thandhai tham moothappan yEzhpadikaal thodangi

vandhu vazhi vazhi aatseyginRom thiruvOna thiruvizhavil

andhiyam pOdhil ariyuruvaagi ariyai azhiththavanai

pandhanai theera pallaandu pallaayiraththaandu enRu paadudhume.

(Thiruppallaandu - 6)

In the yore, on an auspicious Sravanam day, when the sun was about to set, the Lord appeared as a man-lion and destroyed Hiranyasura, the demon-king who always antagonized the Lord and His devotees. We are servants to this Lord Nrusimha for seven generations. Aye, devotees of the Lord ! Come and join us and let us all sing the glories of Sri Hari. Your sufferings will surely come to an end !

பாசுரம் பதம் பிரிக்கவும் English Summary
Plain Style Audio

[பொருள்]

என் தந்தை, அவர் தந்தை, அவர் தந்தை என்று ஏழு தலைமுறைகளாக இறைவனை அணுகி அவனுக்குச் சேவை செய்யும் அடிமைகளாக இருக்கிறோம். எங்களுடன் சேர்ந்துக் கொள்ளுங்கள். ஸ்ரீ ஹரியை அணுகினால் நமது துன்பங்கள் அனைத்தும் தீரும்; ஆதலால் அவன் புகழைப் பாடி அவனை வாழ்த்துவோம். தனது பக்தனான பிரஹலாதனின் வாக்கு மெய்யாகும்படி, மங்களகரமானதோர் திருவோண நட்சத்திர தினத்தன்று, அழகிய மாலைப் பொழுதில் நரசிம்மமாய் அவதாரம் செய்தவனுக்குப் "பல்லாண்டு" பாடுவோம். திருமாலைத் தனது எதிரியாகவே பாவித்து வந்த இரண்யாசுரனை அழித்த அந்த நரசிம்ம மூர்த்திக்குப் "பல்லாண்டு" பாடுவோம். இரண்யனை அழித்த ஆயாசம் தீர "பல்லாண்டு" பாடுவோம்.

(சொற்பொருள்)

அம் - அழகிய

அந்தியம் போது - அழகிய மாலைப் பொழுது

பந்தனை - சோர்வு, ஆயாசம்

அரி - சிங்கம், எதிரி

Share your comments

திவ்ய தேசம்

இசைவடிவில் திவ்ய பிரபந்த பாசுரங்களை கேட்கலாம்.

திருவாய்மொழி அமுதம்

தேவகானம்

திருவெழுகூற்றிருக்கை

திருவாசிரியம்

திருச்சந்த விருத்தம்

STD Pathasala products page

STD PATHASALA PRODUCT - DEVAGANAM

Nearly 400 Pasurams from Divya Prabandham rendered with intense devotion in musical form.

Comes along with a book that contains the Carnatic notes for all the pasurams rendered.

காலை யெழுந்திருந்து கரிய குரு விக்கணங்கள்
மாலின் வரவுசொல்லி மருள் பாடுதல் மெய்ம்மைகொலோ?
சோலை மலைப்பெருமான் துவ ராபதி யெம்பெருமான்*
ஆலி னிலைப்பெருமான் அவன் வார்த்தை யுரைக்கின்றதே.
(நாச்சியார் திருமொழி - 9.8)

காலை எழுந்திருந்து கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லி மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ?
சோலைமலைப் பெருமான் துவராபதி எம்பெருமான்
ஆலின் இலைப் பெருமான் அவன் வார்த்தை உரைக்கின்றதே.
(நாச்சியார் திருமொழி - 9.8)

kaalai ezhundhirundhu kariya kuruvi kaNangaL
maalin varavu solli maRuL paadudhal meymmai kolO?
SOlaimalaip perumaan thuvaraapadhi emperumaan
aalinilai perumaan avan vaarththai uraikkindradhe.
(Naachiyaar Thirumozhi - 9.8)

Flocks of blackbirds spoke as I woke up this morning, about the Lord of mountain groves, about the King of Dvaraka, about the Lord who slept on a fig leaf in the deluge. Their sweet Marul tune seems to foretell His coming, could it be true?

பாசுரம் பதம் பிரிக்கவும் English Summary