திருப்பல்லாண்டு - 1

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண் ணா!உன்
சேவடி செவ்வி திருக் காப்பு .
(திருப்பல்லாண்டு - 1)

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
சேவடி செவ்வி திருக்காப்பு .
(திருப்பல்லாண்டு - 1)

pallaandu pallaandu pallaayiraththaandu

pala kOdi nooraayiram

maLLaanda thinthOL maNivaNNaa un

sevvadi sevvi thirukkaappu.

(thiruppallaandu - 1)

Many years, many years, many thousands of years and many hundred thousands more. Gem-hued Lord with mighty wrestling shoulders, your red lotus feet are our refugee.

[பொருள்]

மதுராவில், கம்சனுடைய மல்லரங்கில் முஷ்டிகன், சாணுரன் முதலிய மல்லர்களை அடக்கி ஆண்ட திண்மையான தோள்களை உடைய கிருஷ்ணா ! உனது சிவந்த பாதங்களின் அழகுக்கு கால தத்துவம் உள்ள வரையில் ஒரு குறைவும் வராதிருக்க வேண்டும்.

(சொற்பொருள்)

பல்லாண்டு - நீண்ட காலம், நீடூழி

மல்லாண்ட - மல்லர்களை வெற்றி கொண்ட

திண்தோள் - பலம் பொருந்திய, வலிமையான தோள்கள்

மணிவண்ணன் - கண்ணின் மணியின் நிறத்தவன்; நீலமணி நிறத்தவன்;

செவ்வடி/சேவடி - சிவந்த பாதங்கள்

செவ்வி - அழகு; காட்சி; புதுமை; மணம்

திருக்காப்பு - தெய்வக் காப்பு, அந்தி ரக்ஷை

Koodal-Azhagar

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com