அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

நந்தன் மதலையைக் காகுத்தனை நவின்று

உந்தி பறந்த ஒளியிழையார்கள் சொல்

செந்தமிழ்த் தென்புதுவை விட்டுசித்தன் சொல்

ஐந்தினோடு ஐந்தும் வல்லார்க்கு அல்லல் இல்லையே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

நெறிந்த கருங்குழல் மடவாய் !

நின் அடியேன் விண்ணப்பம் ;

செறிந்த மணி முடிச் சனகன்

சிலை இறுத்து நினைக் கொணர்ந்தது

அறிந்து அரசு களைகட்ட

அருந்தவத்தோன் இடை விலங்கச்

செறிந்த சிலைகொடு தவத்தைச்

சிதைத்ததும் ஓர் அடையாளம்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

அல்லியம்பூ மலர்க்கோதாய்!

அடிபணிந்தேன் விண்ணப்பம் ;

சொல்லுகேன் கேட்டருளாய்,

துணைமலர்க் கண் மடமானே !

எல்லியம் போது இனிதிருத்தல்

இருந்தது ஓர் இட வகையில்

மல்லிகை மா மாலைகொண்டு

அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கலக்கிய மா மனத்தனளாய்க்

கைகேசி வரம் வேண்ட

மலக்கிய மா மனத்தனனாய்

மன்னவனும் மறாது ஒழியக்

குலக்குமரா ! காடு உறையப்

போ என்று விடை கொடுப்ப

இலக்குமணன் தன்னொடும்

அங்கு ஏகியது ஓர் அடையாளம்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வார் அணிந்த முலை மடவாய்!

வைதேவீ ! விண்ணப்பம்;

தேர் அணிந்த அயோத்தியர்கோன்

பெருந்தேவீ ! கேட்டருளாய்,

கூர் அணிந்த வேல் வலவன்

குகனோடும் கங்கைதன்னிற்

சீர் அணிந்த தோழமை

கொண்டதும் ஓர் அடையாளம்.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மான் அமரும் மென்நோக்கி!

வைதேவீ ! விண்ணப்பம் ;

கான் அமரும் கல்அதர் போய்க்

காடு உறைந்த காலத்துத்

தேன் அமரும் பொழிற் சாரல்

சித்திரகூடத்து இருப்பப்

பால்மொழியாய் ! பரத நம்பி

பணிந்ததும் ஓர் அடையாளம்.

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்;

பெருந்துயர் இடும்பையில் பிறந்து

கூடினேன் கூடி இளையவர் தம்மோடு

அவர் தரும் கல்வியே கருதி

ஓடினேன்; ஓடி, உய்வதோர் பொருளால்

உணர்வு என்னும் பெரும் பதம் தெரிந்து

நாடினேன்; நாடி, நான் கண்டு கொண்டேன்

நாராயணா என்னும் நாமம்.

(பெரிய திருமொழி 1.1.1)

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருக்குடந்தை

பாசுர எண்: 949
பெரிய திருமொழி : 1

ஆவியே ! அமுதே ! என நினைந்து உருகி

அவர் அவர் பணை முலை துணையாப்

பாவியேன் உணராது, எத்தனை பகலும்

பழுது போய் ஒழிந்தன நாள்கள்;

தூவி சேர் அன்னம் துணையொடும் புணரும்

சூழ் புனல் குடந்தையே தொழுது, என்

நாவினால் உய்ய நான் கண்டு கொண்டேன்

நாராயணா என்னும் நாமம்.

(பெரிய திருமொழி 1.1.5)

சேமமே வேண்டி தீவினை பெருக்கி

தெரிவைமார் உருவமே மருவி

ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய்

ஒழிந்தன கழிந்த அந்நாள்கள்;

காமனார் தாதை நம்முடை அடிகள்

தம் அடைந்தார் மனத்து இருப்பார்

நாமம் நான் உய்ய நான் kaNdukoNdEn

நாராயணா என்னும் நாமம்.

(பெரிய திருமொழி 1.1.3)

அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்: திருக்குடந்தை

பாசுர எண்: 952
பெரிய திருமொழி : 1

கள்வனேன் ஆனேன்; படிறு செய்து இருப்பேன்;

கண்டவா திரிதந்தேனேலும்,

தெள்ளியேன் ஆனேன்; செல் கதிக்கு அமைந்தேன்;

உள் எலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன்;

உடம்பு எலாம் கண்ண நீர் சோர,

நள் இருள் அளவும் , பகலும் நான் அழைப்பன்

நாராயணா என்னும் நாமம்.

(பெரிய திருமொழி 1.1.5)

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com