அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்:

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 1

கர விசும்பு எரி, வளி, நீர், நிலம் இவைமிசை
வரன் நவில், திறல், வலி, அளி, பொறை ஆய்நின்ற
பரன் அடிமேல் குருகூர்ச் சடகோபன் சொல்

நிரல்-நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

கோளரியின் உருவங் கொண்டு அவுணன் உடலம் குருதி குழம்பி ஏழ, கூர்உகிரால் குடைவாய் மீள அவன்மகனை மெய்ம்மை கொளக் கருதி; மேலை அமரர்பதி மிக்கு வெகுண்டு வரக் காள நன் மேகமவை கல்லொடு கால் பொழியக் கருதி வரை குடையாக் காலிகள் காப்பவனே ! ஆள ! எனக்கு ஒரு கால், ஆடுக செங்கீரை , ஆயர்கள் போரேறே! ஆடுக, ஆடுகவே !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

நம்முடை நாயகனே ! நான்மறையின் பொருளே ! நாவியுள் நற்கமல நான்முகனுக்கு ஒருகால் தம்மனை ஆனவனே! தரணி தலமுழுதும் தாரகையின் உலகும் தடவி அதன் புறமும் விம்ம வளர்ந்தவனே ! வேழமும் ஏழ் விடையும் விரவிய வேலைதனுள் வென்று வருபவனே ! அம்ம ! எனக்கு ஒரு கால், ஆடுக செங்கீரை, ஆயர்கள் போரேறே! ஆடுக, ஆடுகவே !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

வானவர்தாம் மகிழ, வன் சகடம் உருள, வஞ்ச முலைப்பேயின் நஞ்ச்ம் அது உண்டவனே ! கானக வல் விளவின் காய் உதிரக் கருதிக் கன்றுஅது கொண்டு எறியும் கருநிற என்கன்றே தேனுகனும் முரனும் திண்திறல் வெந்நரகன் என்பவர் தாம் மடியச் செரு அதிரச் செல்லும் ஆனை ; எனக்கு ஒரு கால், ஆடுக செங்கீரை, ஆயர்கள் போரேறே! ஆடுக, ஆடுகவே !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

மத்து அளவுந் தயிரும் வார்குழல் நன்மடவார் வைத்தன நெய் களவால் வாரி விழுங்கி ஒருங்கு ஒத்த இணைமருதம் உன்னிய வந்தவரை ஊரு கரத்தினொடும் உந்திய வெந்திறலோய் ! முத்தின் இளமுறுவல் முற்ற வருவதன்முன் முன்ன முகத்து அணிஆர் மொய்குல்கள் அலைய, அத்த ! எனக்கு ஒருகால், ஆடுக செங்கீரை, ஆயர்கள் போரேறே! ஆடுக, ஆடுகவே !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

காய மலர்நிறவா ! கருமுகில் போல் உருவா ! கானக மா மடுவிற் காளியன் உச்சியிலே தூய நடம் பயிலும் சுந்தர ! என்சிறுவா ! துங்க மதக்கரியின் கொம்பு பறித்தவனே ! ஆயம் அறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை அந்தரம் இன்றி, அழித்து ஆடிய தாளிணையாய் ! ஆய ! எனக்கு ஒருகால், ஆடுக செங்கீரை, ஆயர்கள் போரேறே ! ஆடுக, ஆடுகவே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

துப்பு உடை ஆயர்கள்தம் சொல் வழுவாது ஒருகால் தூய கருங்குழல் நல் தோகைமயில் அனைய நப்பினைதன் திறமா நல் விடை ஏழ் அவிய நல்ல திறல் உடைய நாதனும் ஆனவனே ! தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத் தனிஒரு தேர் கடவித் தாயொடு கூட்டியஎன் அப்ப! எனக்கு ஒருகால், ஆடுக செங்கீரை, ஆயர்கள் போரேறே ! ஆடுக, ஆடுகவே .

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

உன்னையும் ஒக்கலையிற் கொண்டு தம்இல் மருவி உன்னொடு தங்கள் கருத்து ஆயின செய்து வரும் கன்னியரும் மகிழ, கண்டவர் கண்குளிர, கற்றவர் தெற்றிவர, பெற்ற எனக்கு அருளி மன்னு குறுங்குடியாய் ! வெள்ளறையாய் ! மதிள்சூழ் சோலைமலைக்கு அரசே ! கண்ணபுரத்து அமுதே ! என் அவலம் களைவாய் ! ஆடுக செங்கீரை. ஏழ் உலகும் உடையாய் ! ஆடுக, ஆடுகவே .

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

பாலொடு நெய் தயிர் ஒண் சாந்தொடு சண்பகமும் பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறி வர, கோல நறும்பவளச் செந்துவர் வாயினிடைக் கோமள வெள்ளிமுளை போல் சிலபல் இலக, நீலநிறத்து அழகார் ஐம்படையின் நடுவே நின் கனிவாய் அமுதம் இற்று முறிந்து விழ ஏலும் மறைப்பொருளே! ஆடுக செங்கீரை, ஏழ் உலகும் உடையாய் ! ஆடுக, ஆடுகவே .

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்:

உய்ய உலகு படைத்து உண்ட மணிவயிறா !
ஊழிதொறு ஊழி பல ஆலின் இலையதன்மேல்
பைய உயோகு - துயில் கொண்ட பரம்பரனே !
பங்கய நீள்நயனத்து அஞ்சன மேனியனே!
செய்யவள் நின் அகலம் சேமம் எனக் கருதி;
செல்வு பொலி மகரக் காது திகழ்ந்து இலக,
ஐய ! எனக்கு ஒருகால், ஆடுக செங்கீரை,

ஆயர்கள் போரேறே ! ஆடுக, ஆடுகவே.

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com