பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே !
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின் அலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்திரன் ஆதிக்கு எல்லாம்
நாவிக் கமலக் முதல் கிழங்கே ! உம்பர் அந்த அதுவே.

(திருவாய்மொழி - 10.10.3)

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

உம்பர் அம் தண் பாழே ! ஓ ! அதனுள் மிசை நீயே ! ஓ !
அம்பரம், நல் சோதி; அதனுள் பிரமன்; அரன் நீ;
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ;
எம்பரம் சாதிக்கலுற்று என்னைப் போர விட்டிட்டாயே.

(திருவாய்மொழி - 10.10.4)

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கலுற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ ! எனது என்பது என்? யான் என்பது என்?
தீர இரும்பு உண்ட நீர் அது போல என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே !

(திருவாய்மொழி - 10.10.5)

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

எனக்கு ஆரா அமுதாய் எனது ஆவியை இன் உயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய்; இனி உண்டொழியாய்
புனக் காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனிவாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவைக்கு அன்பா ! என் அன்பேயோ !

(திருவாய்மொழி - 10.10.6)

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

கோல மலர்ப்பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ !
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமர்ந்தது ஒப்ப
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய் !
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனிப் போக்குவனோ ?

(திருவாய்மொழி - 10.10.7)

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

பெற்று இனிப் போக்குவனோ ? உன்னை, என் தனிப் பேருயிரை

உற்ற இருவினையாய் , உயிராய் பயன் ஆயவையாய்

முற்ற இம்மூவுலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் ! என் முதல் தனி வித்தேயோ !
(திருவாய்மொழி - 10.10.8)

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

முதல் தனி வித்தேயோ ! முழு மூவுலகு ஆதிக்கு எல்லாம்
முதல் தனி உன்னை உன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்?
முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்றுறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவிலீ ! ஓ !
(திருவாய்மொழி - 10.10.9)

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழே ! ஓ !
சூழ்ந்து அதனில் பெரிய பர நல் மலர்ச் சோதீ ! ஓ !
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமே ! ஓ !
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே.
(திருவாய்மொழி - 10.10.10)

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

அவா அறச் சூழ் அரியை, அயனை, அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப் பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே.
(திருவாய்மொழி - 10.10.11)

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

நெடுமாற்கு அடிமை செய்வேன் போல் அவனைக் கருத வஞ்சித்து
தடுமாற்று அற்ற தீக்கதிகள் முற்றும் தவிர்ந்த சதிர் நினைந்தால்
கொடு மா வினையேன் அவன் அடியார் அடியே கூடும் இது அல்லால்
விடுமாறு என்பது என்? அந்தோ? வியன் மூவுலகு பெறினுமே.
(திருவாய்மொழி - 8.10.1)

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com