அருளியவர்: பொய்கையாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாசுர எண்: 3189
முதல் திருவந்தாதி

ஒன்றும் மறந்து அறியேன் ஓத நீர் வண்ணனை நான்
இன்று மறப்பனோ? ஏழைகாள் -- அன்று
கரு அரங்கத்துள் கிடந்து கை தொழுதேன் கண்டேன்
திரு அரங்கம் மேயான் திசை.
(முதல் திருவந்தாதி - 6)

அருளியவர்: பொய்கையாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாசுர எண்: 3190
முதல் திருவந்தாதி

திசையும் திசை உறு தெய்வமும் தெய்வத்து
இசையும் கருமம் எல்லாம் -- அசைவு இல் சீர்
கண்ணன், நெடுமால், கடல் கடைந்த கார் ஓத
வண்ணன் படைத்த மயக்கு.
(முதல் திருவந்தாதி - 7)

அருளியவர்: பொய்கையாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாசுர எண்: 3191
முதல் திருவந்தாதி

மயங்க, வலம்புரி வாய் வைத்து, வானத்து
இயங்கும் எறி கதிரோன் தன்னை, முயங்கு அமருள்
தேர் ஆழியால் மறைத்தது என் நீ, திருமாலே !
போர் ஆழிக் கையால் பொருது?
(முதல் திருவந்தாதி - 8)

அருளியவர்: பொய்கையாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாசுர எண்: 3192
முதல் திருவந்தாதி

பொருகோட்டு ஓர் ஏனமாய்ப் புக்கு இடந்தாய்க்கு அன்று உன்
ஒருகோட்டின் மேல் கிடந்தது அன்றே -- விரி தோட்ட
சேவடியை நீட்டி திசை நடுங்க விண் துளங்க
மா வடிவின் நீ அளந்த மண் !
(முதல் திருவந்தாதி - 9)

அருளியவர்: பொய்கையாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பாசுர எண்: 3193
முதல் திருவந்தாதி

மண்ணும் மலையும் மறி கடலும் மாருதமும்
விண்ணும் விழுங்கியது மெய் என்பர்; எண்ணில்
அலகு அளவு கண்ட சீர் ஆழியாய்க்கு அன்று இவ்
உலகு அளவு உண்டோ உன் வாய்?
(முதல் திருவந்தாதி - 10)

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: திருக்கோட்டியூர்

பத்து நாளும் கடந்த இரண்டாம் நாள்

எத்திசையும் சயமரம் கோடித்து
மத்த மாமலை தாங்கிய மைந்தனை
உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே.
(பெரியாழ்வார் திருமொழி - 8)
After ten days and two, the cowherds erected festooned pillars on all four sides then lifted the child from the cradle, singing "The-prince-who-lifted-the wild elephants-mountain-against-a-hailstorm!"

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: திருக்கோட்டியூர்

கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்*
எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கு இலாமையால் நான் மெலிந்தேன் நங்காய்.
(பெரியாழ்வார் திருமொழி - 9)
Lay him in the cradle, and he kicks like it would break; take him to the
waist, and he clings like a wench; hold him in front and he trounces
the belly. I can bear it no more, Ladies, I am exhausted!

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: திருக்கோட்டியூர்

செந்நெல் ஆர் வயல் சூழ் திருக்கோட்டியூர்
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை
மின்னு நூல் விட்டுசித்தன் விரித்த இப்
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே.
(பெரியாழ்வார் திருமொழி - 10)
These sweet songs of Vishnuchitta who wears the bright Vedic thread
speak of the birth of the eternal Lord Narayana in famed Tirukkottiyur,
surrounded by fertile paddy fields. Those who master it will gather no sin.

கதிரவன் குணதிசை சிகரம் வந்து அணைந்தான்
கனை இருள் அகன்றது காலை அம் பொழுதாய்
மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம்
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி
எதிர்திசை நிறைந்தனர்; இவரொடும் புகுந்த
இருங் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலில் அலைகடல் போன்று உளது எங்கும்;
அரங்கத்தம்மா ! பள்ளி எழுந்தருளாயே.

(திருப்பள்ளியெழுச்சி - 1)

கொழுங்கொடி முல்லையின் கொழுமலர் அணவிக்
கூர்ந்தது குணதிசை மாருதம் இதுவோ !
எழுந்தன மலர் அணைப் பள்ளிகொள் அன்னம்
ஈன்பனி நனைந்த தம் இருஞ் சிறகு உதறி;
விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ்வாழ்
வெள் எயிறு உற, அதன் விடத்துனுக்கு அனுங்கி
அழுங்கிய ஆனையின் அருந்துயர் கெடுத்த
அரங்கத்தம்மா ! பள்ளி எழுந்தருளாயே.

(திருப்பள்ளியெழுச்சி - 2)

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com