அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது


வேடர் மறக்குலம் போலே

வேண்டிற்றுச் செய்து என்மகளைக்

கூடிய கூட்டமே யாகக்

கொண்டு குடி வாழுங் கொல்லோ?

நாடும் நகரும் அறிய

நல்லது ஓர் கண்ணாலம் செய்து,

சாடு இறப் பாய்ந்த பெருமான்

தக்கவா கைப்பற்றுங் கொல்லோ?

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

அண்டத்து அமரர் பெருமான்

ஆழியான் இன்று என்மகளைப்

பண்டப் பழிப்புக்கள் சொல்லிப்

பரிசு அற ஆண்டிடுங் கொல்லோ?

கொண்டு குடிவாழ்க்கை வாழ்ந்து

கோவலப் பட்டம் கவித்துப்

பண்டை மணாட்டிமார் முன்னே

பாதுகாவல் வைக்குங் கொல்லோ ?

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

குடியிற் பிறந்தவர் செய்யும்

குணம் ஒன்றும் செய்திலன், அந்தோ !

நடை ஒன்றும் செய்திலன், நங்காய் !

நந்தகோபன் மகன் கண்ணன் ;

இடை இருபாலும் வணங்க
இளைத்து இளைத்து என்மகள் ஏங்கிக்
கடைகயிறே பற்றி வாங்கிக்
கை தழும்பு ஏறிடுங் கொல்லோ ?

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வெண்ணிறத் தோய் தயிர் தன்னை

வெள்வரைப்பின் முன் எழுந்து

கண் உறங்காதே இருந்து

கடையவும் தான்வல்லள் கொல்லோ?

ஒண்ணிறத் தாமரைச் செங்கண்

உலகளந்தான் என்மகளைப்

பண் அறையாப் பணிகொண்டு

பரிசு அற ஆண்டிடுங் கொல்லோ?

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மாயவன் பின்வழி சென்று வழியிடை

மாற்றங்கள் கேட்டு

ஆயர்கள் சேரியிலும் புக்கு அங்குத்தை

மாற்றமும் எல்லாம்

தாயவள் சொல்லிய சொல்லைத்

தண் புதுவைப் பட்டன் சொன்ன

தூய தமிழ் பத்தும் வல்லார்

தூ மணிவண்ணனுக்கு ஆளரே

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

என் நாதன் தேவிக்கு அன்று இன்பப்பூ ஈயாதாள்

தன் நாதன் காணவே தண்பூ மரத்தினை

வன் நாதப் புள்ளால் வலியப் பறித்திட்ட

என் நாதன் வன்மையைப் பாடிப் பற !
எம்பிரான் வன்மையைப் பாடிப் பற !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

என் வில்வலி கண்டு போ என்று எதிர்வந்தான்

தன் வில்லினோடும் தவத்தை எதிர்வாங்கி

முன் வில் வலித்து முதுபெண் உயிருண்டான்

தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற !
தாசரதி தன்மையைப் பாடிப் பற !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

உருப்பிணி நங்கையைத் தேர் ஏற்றிக் கொண்டு

விருப்புற்று அங்கு ஏக விரைந்து எதிர் வந்து

செருக்கு உற்றான் வீரம் சிதையத் தலையைச்

சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப் பற !

தேவகி சிங்கத்தைப் பாடிப் பற !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மாற்றுத்தாய் சென்று வனம்போகே என்றிட

ஈற்றுத்தாய் பின்தொடர்ந்து எம்பிரான் ! என்று அழ

கூற்றுத் தாய் சொல்லக் கொடிய வனம் போன

சீற்றம் இலாதானைப் பாடிப் பற !

சீதை மணாளனைப் பாடிப் பற !

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து

நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு

அஞ்சப் பணத்தின்மேல் பாய்ந்திட்டு அருள்செய்த

அஞ்சன வண்ணனைப் பாடிப் பற !

அசோதைதன் சிங்கத்தைப் பாடிப் பற !

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com