அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

பிண்டத் திரளையும் பேய்க்கு இட்ட நீர்ச் சோறும்

உண்டற்கு வேண்டி நீ ஓடித் திரியாதே,

அண்டத்து அமரர் பெருமான் அழகு அமர்

வண்டு ஓத்து இருண்ட குழல்வாராய், அக்காக்காய்!

மாயவன்தன் குழல்வாராய் , அக்காக்காய்!

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

உந்தி எழுந்த உருவ மலர்தன்னில்

சந்தச் சதுமுகன்தன்னைப் படைத்தவன்

கொந்தக் குழலைக் குறந்து புளி அட்டித்

தந்தத்தின் சீப்பால் குழல்வாராய், அக்காக்காய்!

தாமோதரன் தன் குழல்வாராய், அக்காக்காய்!

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

மன்னன்தன் தேவிமார் கண்டு மகிழ்வு எய்த

முன்இவ் உலகினை முற்றும் அளந்தவன்

பொன்னின் முடியினைப் பூஅணைமேல் வைத்துப்

பின்னே இருந்து குழல்வாராய், அக்காக்காய்!

பேர்ஆயிரத்தான் குழல்வாராய், அக்காக்காய்!

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கண்டார் பழியாமே அக்காக்காய் கார்வண்ணன்

வண்டு ஆர் குழல்வார வா என்ற ஆய்ச்சி சொல்

விண் தோய் மதில் வில்லிபுத்தூர்க் கோன் பட்டன் சொல்

கொண்டாடிப் பாடக் குறுகா வினை தாமே.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கிழக்கிற் குடி மன்னர் கேடு இலாதாரை

அழிப்பான் நினைந்திட்டு அவ் ஆழி அதனால்

விழிக்கும் அளவிலே வேர் அறுத்தானைக்

குழற்கு அணி ஆகக் குழல்வாராய் ! அக்காக்காய்!

கோவிந்தன் தன் குழல்வாராய் , அக்காக்காய்!

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

வேலிக் கோல் வெட்டி விளையாடு வில் ஏற்றி
தாலிக் கொழுந்தைத் தடங்கழுத்திற் பூண்டு
பீலித் தழையைப் பிணைத்துப் பிறகிட்டு,
காலிப் பின் போவாற்கு ஓர் கோல் கொண்டு வா,
கடல்நிற வண்ணற்கு ஓர்கோல் கொண்டு வா.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கொங்கும் குடந்தையும் கோட்டியூரும் பேரும்
எங்கும் திரிந்து விளையாடும் என்மகன்
சங்கம் பிடிக்கும் தடக்கைக்குத் தக்க நல்
அங்கம் உடையது ஓர் கோல் கொண்டு வா,
அரக்கு வழித்தது ஓர் கோல் கொண்டு வா.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

கறுத்திட்டு எதிர்நின்ற கஞ்சனைக் கொன்றான் ,
பொறுத்திட்டு எதிர்வந்த புள்ளின் வாய் கீண்டான்;
நெறித்த குழல்களை நீங்க முன் ஓடிச்
சிறுக்கன்று மேய்ப்பாற்கு ஓர் கோல் கொண்டு வா,
தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

ஒன்றே உரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவான்
துன்று முடியான் துரியோதனன் பக்கல்,
சென்று அங்குப் பாரதம் கையெறிந்தானுக்குக்
கன்றுகள் மேய்ப்பது ஓர் கோல் கொண்டு வா,
கடல்நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா.

அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: பொது

சீர் ஒன்று தூதாய்த் துரியோதனன் பக்கல்
ஊர் ஒன்று வேண்டிப் பெறாத உரோடத்தால் ,
பார் ஒன்றிப் பாரதம் கைசெய்து பார்த்தற்குத்
தேர் ஒன்றை ஊர்ந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா,
தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com