சாம் இடத்து என்னை குறிக்கொள் கண்டாய்,

சங்கொடு சக்கரம் ஏந்தினானே !

நா மடித்து என்னை அனேக தண்டம்

செய்வதா நிற்பர் நமன்தமர்கள் ;

போம் இடத்து உன்திறத்து எத்தனையும்

புகாவண்ணம் நிற்பதோர் மாயை வல்லை;

ஆம் இடத்து உன்னைச் சொல்லி வைத்தேன்,

அரங்கத்து அரவணைப் பள்ளியானே!

எல்லையில் வாசல் குறுகச் சென்றால்

எற்றி நமன் தமர் பற்றும் போது*

நில்லுமின் என்னும் உபாயம் இல்லை;

நேமியும் சங்கமும் ஏந்தினானே*

சொல்லலாம் போதே உன் நாமம் எல்லாம்

சொல்லினேன் என்னைக் குறிக் கொண்டு என்றும்*

அல்லற் படா வண்ணம் காக்க வேண்டும்;

அரங்கத்து அரவணைப் பள்ளியானே !

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com