பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

கோல மலர்ப்பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ !
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமர்ந்தது ஒப்ப
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய் !
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனிப் போக்குவனோ ?

(திருவாய்மொழி - 10.10.7)

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

பெற்று இனிப் போக்குவனோ ? உன்னை, என் தனிப் பேருயிரை

உற்ற இருவினையாய் , உயிராய் பயன் ஆயவையாய்

முற்ற இம்மூவுலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் ! என் முதல் தனி வித்தேயோ !
(திருவாய்மொழி - 10.10.8)

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

முதல் தனி வித்தேயோ ! முழு மூவுலகு ஆதிக்கு எல்லாம்
முதல் தனி உன்னை உன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்?
முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்றுறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவிலீ ! ஓ !
(திருவாய்மொழி - 10.10.9)

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழே ! ஓ !
சூழ்ந்து அதனில் பெரிய பர நல் மலர்ச் சோதீ ! ஓ !
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமே ! ஓ !
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே.
(திருவாய்மொழி - 10.10.10)

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

அவா அறச் சூழ் அரியை, அயனை, அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப் பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே.
(திருவாய்மொழி - 10.10.11)

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

நெடுமாற்கு அடிமை செய்வேன் போல் அவனைக் கருத வஞ்சித்து
தடுமாற்று அற்ற தீக்கதிகள் முற்றும் தவிர்ந்த சதிர் நினைந்தால்
கொடு மா வினையேன் அவன் அடியார் அடியே கூடும் இது அல்லால்
விடுமாறு என்பது என்? அந்தோ? வியன் மூவுலகு பெறினுமே.
(திருவாய்மொழி - 8.10.1)

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

வியன் மூவுலகு பெறினும் போய்த் தானே தானே ஆனாலும்
புயல் மேகம் போல் திருமேனி அம்மான் புனைபூம் கழல் அடிக்கீழ்
சயமே அடிமை தலைநின்றார் திருத்தாள் வணங்கி இம்மையே
பயனே இன்பம் யான் பெற்றது உறுமோ பாவியேனுக்கே?
(திருவாய்மொழி - 8.10.2)

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

உறுமோ பாவியேனுக்கு ? இவ்வுலகம் மூன்றும் உடன் நிறைய
சிறுமா மேனி நிமிர்த்த என் செந்தாமரைக்கண் திருக்குறளன்
நறுமா விரை நாள் மலர் அடிக்கீழ் புகுதல் அன்றி அவன் அடியார்
சிறுமா மனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரியவே.
(திருவாய்மொழி - 8.10.3)

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என்? இரு மாநிலமும் முன் உண்டு உமிழ்ந்த
செங்கோலத்த பவளவாய்ச் செந்தாமரைக்கண் என் அம்மான்
பொங்கு ஏழ் புகழ்கள் வாயவாய்ப் புலன்கொள் வடிவு என் மனத்ததாய்
அங்கு ஏய் மலர்கள் கையவாய் வழிப்பட்டு ஓட அருளிலே.
(திருவாய்மொழி - 8.10.4)

பாசுர எண்: 0
திருவாய்மொழி : 10

வழிப்பட்டு ஓட அருள் பெற்று மாயன் கோல மலர் அடிக்கீழ்
சுழிப்பட்டு ஓடும் சுடர்ச்சோதி வெள்ளத்து இன்புற்று இருந்தாலும்
இழிப்பட்டு ஓடும் உடலினில் பிறந்து தன் சீர் யான் கற்று
மொழிப்பட்டு ஓடும் கவி அமுதம் நுகர்ச்சி உறுமோ ? முழுதுமே.
(திருவாய்மொழி - 8.10.5)

Get in touch

தொடர்பு கொள்ள

Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com